சென்னையில் புதிய உச்சத்தை தொட்ட கொரோனா.. அதிகமான பாதிப்பிற்கு இதுதான் காரணம்.. மாவட்ட வாரியாக முழு விவரம்

By karthikeyan VFirst Published May 1, 2020, 7:16 PM IST
Highlights

சென்னையில் இன்று ஒரே நாளில் 176 பேருக்கு கொரோனா உறுதியானதையடுத்து, சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 1000ஐ கடந்துவிட்ட நிலையில், மாவட்ட வாரியாக பாதிப்பு விவரத்தை பார்ப்போம். 
 

தமிழ்நாட்டில் நேற்று வரை கொரோனா பாதிப்பு 2323ஆக இருந்த நிலையில் இன்று ஒரே நாளில், இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 203 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 2526ஆக அதிகரித்துள்ளது. 

சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 176 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. எனவே சென்னையில் பாதிப்பு 1082ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டின் மொத்த பாதிப்பில் 43 சதவிகிதத்தை சென்னை பகிர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத வகையில் அதிகமானோருக்கு பரிசோதனை செய்யப்படுவதுதான் இதற்கு காரணம். கடந்த 2 நாட்களாக தினமும் சுமார் 10 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. சென்னையில் மட்டும் 3200 சோதனைகள் இன்று செய்யப்பட்டுள்ளன. அதன் விளைவாகத்தான் பாதிப்பு எண்ணிக்கையும் அதிகமாகியுள்ளது. அதிகமானோரை பரிசோதனை செய்வதால் அதிகமான பாசிட்டிவ் கேஸ்கள் கண்டறியப்படுகின்றன. இது சரியான நடவடிக்கைதான். எனவே அதிகமான நம்பரை கண்டு மக்கள் பீதியடைய தேவையில்லை. 

அதிகமான பரிசோதனைகளை செய்து அதிகமான பாசிட்டிவ் கேஸ்களை கண்டறிவதன் மூலமாகத்தான் கொரோனாவை விரட்ட முடியும். அந்த வகையில் இதுவரை தமிழ்நாட்டில் ஒரு லட்சத்து 29 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் 10 ஆயிரத்தை கடந்து படுமோசமாக பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிராவில் கூட ஒரு லட்சத்து 35 ஆயிரம் பேர் தான் பரிசோதிக்கப்பட்டிருக்கிறார்கள். 

எனவே தமிழ்நாடு சரியான பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறது. இன்று சென்னைக்கு அடுத்தபடியாக அதிகபட்ச பாதிப்பே 8 தான். செங்கல்பட்டில் 8 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. திருவள்ளூரில் கூடுதலாக 6 பேருக்கும் மதுரையில் மூவருக்கும் தஞ்சாவூர் மற்றும் காஞ்சிபுரத்தில் தலா 2 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. 

மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம்:

அரியலூர் - 8

செங்கல்பட்டு - 86

சென்னை - 1082

கோவை - 141

கடலூர் - 28

தர்மபுரி - 1

திண்டுக்கல் - 81

ஈரோடு - 70

கள்ளக்குறிச்சி - 6

காஞ்சிபுரம் - 28

கன்னியாகுமரி - 16

கரூர் - 43

மதுரை - 87

நாகப்பட்டினம் - 45

நாமக்கல் - 59

நீலகிரி - 9

பெரம்பலூர் - 9

புதுக்கோட்டை - 1

ராமநாதபுரம் - 18

ராணிப்பேட்டை - 40

சேலம் - 32

சிவகங்கை - 12

தென்காசி - 38

தஞ்சாவூர் - 57

தேனி - 43

திருநெல்வேலி - 63

திருப்பத்தூர் - 18

திருப்பூர் - 112

திருவள்ளூர் - 61

திருவண்ணாமலை - 15

திருவாரூர் - 29

திருச்சி - 51

தூத்துக்குடி - 27

வேலூர் - 22

விழுப்புரம் - 51

விருதுநகர் - 32.
 

click me!