தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பில்லாத 4 மாவட்டங்கள்.. மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம்

By karthikeyan VFirst Published Apr 11, 2020, 9:10 PM IST
Highlights

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தினம் தினம் அதிகரித்து கொண்டே இருந்தாலும் தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் மட்டும் கொரோனா பாதிப்பு இல்லை. மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரத்தை பார்ப்போம். 
 

தமிழ்நாட்டில் தினமும் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டிவருகிறது. நேற்றுவரை 911ஆக இருந்த பாதிப்பு எண்ணிக்கை, இன்று  மேலும் 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் 969ஆக அதிகரித்துள்ளது. 

தமிழ்நாட்டில் கொரோனாவை தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது. ஆனாலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கொஞ்சம் கூட குறையவில்லை. தினமும் குறைந்தது 50 பேர் கூடுதலாக பாதிக்கப்பட்டு கொண்டிருக்கின்றனர்,

தமிழ்நாட்டில் சென்னையில் தான் அதிகபட்சமாக 182 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவை மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை சதத்தை எட்டவுள்ளது. சென்னை, கோவை தவிர திண்டுக்கல், ஈரோடு, நெல்லை ஆகிய மாவட்டங்களிலும் பாதிப்பு அதிகமாக உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் புதுக்கோட்டை, தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் மயிலாடுதுறை(அண்மையில் புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டம்) ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் கொரோனா பாதிப்பே இல்லை. 

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்:

சென்னை - 182

கோவை - 97

ஈரோடு - 60

நெல்லை - 56

திண்டுக்கல் - 55

நாமக்கல், செங்கல்பட்டு - 41

தேனி - 40

திருச்சி - 39

ராணிப்பேட்டை - 36

திருவள்ளூர் - 29

திருப்பூர் - 26

மதுரை - 25

தூத்துக்குடி, நாகப்பட்டினம் - 24

கரூர், விழுப்புரம் - 23

திருப்பத்தூர் - 16

கடலூர்,  கன்னியாகுமரி - 15

சேலம் - 14

திருவாரூர் - 13

விருதுநகர், தஞ்சாவூர், திருவண்ணாமலை, வேலூர் - 11

நீலகிரி - 9

காஞ்சிபுரம், சிவகங்கை - 6

தென்காசி, கள்ளக்குறிச்சி - 3

ராமநாதபுரம் - 2

பெரம்பலூர், அரியலூர் - 1.

click me!