சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் தொடர்பான மோசடி வழக்கில் 205 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துகளை முடக்க அமலாக்கத் துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் உள்ள சதர்ன் அக்ரிபரேன் இன்டஸ்ட்ரீஸ் என்ற தனியார் நிறுவனத்தின் மீதும் அதன் உரிமையாளர்கள் எம்.ஜி.எம். மாறன் மற்றும் எம்.ஜி.எம். ஆனந்த் ஆகியோர் மீதும் அமலாக்கத்துறை பணப்பரிமாற்ற மோசடி வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறது.
கடந்த 2007ஆம் ஆண்டு தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் இயக்குநராக இருந்த மாறன், வங்கியின் 23.6% பங்குகளை முறைகேடாக விற்பனை செய்தாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் அவர் ரிசர்வ் வங்கி கணக்கில் வராத ரூ.293.91 கோடி மதிக்கத்தக்க வெளிநாட்டு முதலீடுகளைச் செய்திருப்பதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.
இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் மாறனுக்குச் சொந்தமான சதர்ன் அக்ரிபரேன் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சொத்துகள் சிலவற்றை பறிமுதல் செய்ய அமலாக்கத் துறை உத்தரவிட்டது. அமலாக்கத் துறையின் உத்தரவை ரத்த செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தனியார் நிறுவனம் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
சட்டவிரோதப் பணப்பரிமாற்ற சட்டம் மறுஆய்வு: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
undefined
இதனை விசாரித்த உயர் நீதிமன்றம், அமலாக்கத் துறையின் அதிகாரத்துக்கு உட்பட்டே விசாரணை நடைபெறுகிறது என்றும் அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் கூறி மனுவை தள்ளுபடி செய்தது.
இதைத் தொடர்ந்து சதர்ன் அக்ரிபரேன் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் மற்றும் அதன் உரிமையளர்களான எம்.ஜி.எம். மாறன், எம்.ஜி.எம். ஆனந்த் ஆகியோருக்குச் சொந்தமான 205.36 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடைச் சட்டம், 2002-ன் கீழ், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது