புதிய கிணறுகள் தோண்டி தண்ணீர் விற்பனை - பொதுமக்கள் பரபரப்பு புகார்

By Asianet TamilFirst Published Jul 31, 2019, 12:20 PM IST
Highlights

காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில், சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்குவதாக கூறி, ராட்சத டேங்கர் லாரிகளில் நிலத்தடி தண்ணீர் உறிஞ்சி விற்பனையில் ஈடுபடுகின்றனர். இதில், வியாபாரத்துக்காக பலர் புதிய கிணறு தோண்டி தண்ணீர் விற்கின்றனர். இந்த அவல நிலையை கண்டு கொள்ளாத அதிகாரிகளால், சாலைகள் நாசமடைவருகின்றன என பொதுமக்கள் கூறுகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு வட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் 39 ஊராட்சிகள் உள்ளன. இதில் வண்டலூர், ஊனைமாஞ்சேரி, காரணைப்புதுச்சேரி, காயரம்பேடு, பெருமாட்டுநல்லூர், குமிழி, கீரப்பாக்கம், நல்லம்பாக்கம் மற்றும் வேங்கடமங்கலம் ஆகிய ஊராட்சிகளில் உள்ள விவசாய கிணறுகளில் ஆயில் மோட்டார் மற்றும் ராட்சத ஜெனரேட்டர்களை அமைத்து டேங்கர் லாரிகளில் தண்ணீர் எடுத்து 24 மணி நேரமும் விற்பனை செய்கின்றனர்.

மேலும், சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்குவதாக கூறி, அரசு அனுமதியின்றி சிலர், புதிய கிணறு மற்றும் ராட்சத போர்வெல் அமைத்து, அதன்மூலம் டேங்கர் லாரிகளுக்கு விற்பனை செய்கின்றனர். இதுபோன்று தண்ணீர் கொண்டு செல்லும் டேங்கர் லாரிகள், தாறுமாறாக செல்வதால் மக்கள் சாலையில் நடமாட முடியவில்லை. பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சத்துடன் சாலையில் நடக்கின்றனர்.

மேற்கண்ட பகுதியில் 300க்கும் மேற்பட்ட ராட்சத டேங்கர் லாரிகள், தினமும் தண்ணீரை ஏற்றிகொண்டு செல்வதால் கிராம சாலைகள் நாசமடைந்து வருகின்றன. பல்வேறு ஊராட்சிகளில் நிலத்தடி நீர் வெகுவாக குறைந்து வருவதால் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இதில், குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளிடம், பொதுமக்கள் பலமுறை புகார் கூறியும் கண்டுகொள்ளாமல் உள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

click me!