டிஜிபியால் கூட அசைக்க முடியாத உளவுத்துறை ஐஜி சத்தியமூர்த்தி..!

By vinoth kumarFirst Published May 3, 2019, 10:02 AM IST
Highlights

உளவுத்துறை ஐஜியாக இருக்கும் சத்தியமூர்த்தியை தேர்தல் டிஜிபி ஆன அசுதோஷ் சுக்லாவால் கூட அசைத்துப் பார்க்க முடியவில்லை.

உளவுத்துறை ஐஜியாக இருக்கும் சத்தியமூர்த்தியை தேர்தல் டிஜிபி ஆன அசுதோஷ் சுக்லாவால் கூட அசைத்துப் பார்க்க முடியவில்லை.

முதல்-அமைச்சராக ஜெயலலிதா இருந்த காலம் தொட்டே உளவுத்துறை ஐஜியாக இருப்பவர் சத்தியமூர்த்தி. இவர் சசிகலா குடும்பத்தின் நெருங்கிய உறவினர் ஆவார். அதாவது சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கு சம்பந்தி முறை. இந்த நெருக்கத்தின் காரணமாக தான் உளவுத்துறை ஐஜி எனும் மிக முக்கியமான பொறுப்புக்கு ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் இவர் நியமிக்கப்பட்டார். 

தமிழகத்தின் அன்றாட முக்கிய நிகழ்வுகள் மற்றும் ரகசியங்களை முதல்-அமைச்சரிடம் தெரிவிக்கும் பணி உளவுத்துறை ஐஜிக்கானது. தினம்தோறும் தமிழக அரசியல் நிகழ்வுகள் சட்டம் ஒழுங்கு விவகாரம் தீவிரவாத அச்சுறுத்தல் உள்ளிட்ட மிக முக்கிய தகவல்களை நோட் போட்டு முதலமைச்சரின் மேஜைக்கு அனுப்பி வைப்பவர் தான் ஐஜி சத்தியமூர்த்தி. மேலும் முதலமைச்சராக இருப்பவர்களுடன் 24 மணி நேரமும் தொடர்பில் இருக்க வேண்டிய பொறுப்பு உளவுத்துறை ஐஜிக்கு உண்டு. 

அந்த அளவிற்கு மிக முக்கியமான பொறுப்பில் தற்போதும் வரைகூட சத்தியமூர்த்தி தொடர்வதற்கான காரணம் அவரது திறமை தான் என்கிறார்கள். சசிகலாவுடன் பிரச்சனை ஏற்பட்டு ஓ பன்னீர்செல்வம் அதிமுகவின் இரண்டாவது அணியாக பிரிந்த போது சில காலம் மட்டும் பதவியிலிருந்து சத்தியமூர்த்தி நீண்ட விடுமுறையில் சென்றார். இதனைத் தொடர்ந்து அவர் மாற்றப்படுவார் என்று கூட தகவல் வெளியானது. 

ஆனால் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி வந்த பிறகு மீண்டும் உளவுத்துறை ஐஜியாக சத்தியமூர்த்தியை நியமிக்கப்பட்டார். சசிகலாவின் உறவினர் ஆக இருந்தும்கூட ஐஜியாக சத்தியமூர்த்தி நடிப்பது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது. ஆனால் அவரது திறமை மற்றும் அனுசரித்துச் செல்லும் பண்பு தான் எடப்பாடி பழனிசாமி தற்போது வரை ஐந்து சத்தியமூர்த்தியை விட்டு வைத்திருப்பதற்கு காரணம் என்கிறார்கள்.

 

இதனிடையே நாடாளுமன்ற தேர்தல் பணிகளில் உளவுத்துறை போலீசார் அதிமுகவுக்கு சாதகமாக செயல்பட்டதாகவும் புகார் எழுந்தது. இதன் பின்னணியில் ஐஜி சத்தியமூர்த்தி வந்த காரணத்தினால் அவரை உடனடியாக பணி இடமாற்றம் செய்யுமாறு தேர்தல் பணிகளுக்கான டிஜிபி அசுதோஷ் சுக்லா தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்தார். ஆனால் அந்தப் பரிந்துரையை தூக்கி தேர்தல் ஆணையம் குப்பையில் போட்டு விட்டது.

 

பிஜேபியின் பரிந்துரையை தூக்கி குப்பையில் போட்டுவிட்டு ஐஜியாக சத்தியமூர்த்தியின் எடுக்க செய்கிறார்கள் என்றால் அவர் எந்த அளவிற்கு சக்தி வாய்ந்தவர் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

click me!