கலாநிதி மாறனுக்கு நோட்டீஸ் அனுப்பிய தயாநிதி மாறன்! என்ன விஷயம்? முழு விவரம்!

Published : Jun 19, 2025, 08:47 PM IST
Dayanidhi Maran

சுருக்கம்

நிதி முறைகேடு செய்ததாக சகோதரர் கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன் சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இது தொடர்பான முழு விவரங்களை பார்ப்போம்.

Dayanidhi Maran notice to Kalanithi Maran: முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக எம்.பி.யுமான தயாநிதி மாறன், சன் டிவி நெட்வொர்க்கின் தலைவரான தனது சகோதரர் கலாநிதி மாறனுக்கு கடுமையான நிதி முறைகேடு செய்ததாகக் குற்றம் சாட்டி சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக மணிகன்ட்ரோல் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இது இந்தியாவின் மிகப்பெரிய ஊடக நிறுவனங்களின் ஒன்றான சன் டிவி நெட்வொர்க் லிமிடெட் உரிமையாளர்களிடையே உள்ள குடும்ப தகராறை வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் வகையில் உள்ளது.

கலாநிதி மாறனுக்கு நோட்டீஸ் அனுப்பிய தயாநிதி மாறன்

ஜூன் 10, 2025 என தேதியிடப்பட்ட நோட்டீஸ், 2003 இல் மீடியா நிறுவனத்தின் பங்குகளை அதன் அசல் நிலைக்கு மீட்டெடுக்காவிட்டால் சன் டிவி தலைவர் கலாநிதி மாறன் மற்றும் ஏழு பிரதிவாதிகள் மீது சிவில், குற்றவியல், ஒழுங்குமுறை மற்றும் அமலாக்க நடவடிக்கைகளைத் தொடங்குவதாக அச்சுறுத்துகிறது. ஏற்கெனவே 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், இப்போது 2வது நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக மணிகன்ட்ரோல் செய்தி கூறுகிறது.

கலாநிதி மாறனைத் தவிர, அவரது மனைவி காவேரி மாறன் உட்பட ஏழு பேர் மீதும் இந்த நோட்டீஸ் வழக்கு தொடர்ந்துள்ளது. சாந்தோமை தலைமையிடமாகக் கொண்ட சென்னையைச் சேர்ந்த ஆராய்ச்சி சார்ந்த வழக்கு ஆதரவு நிறுவனமான லா தர்மாவின் கே.சுரேஷ் மூலம் இந்த சட்ட நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது என்ன?

"உங்களில் முதல் மற்றும் இரண்டாவது நபர்களின் (கலாநிதி மற்றும் காவேரி மாறன்) தனிப்பட்ட நலனுக்காக முழு நிறுவனத்தையும் அதன் சொத்துக்களையும் கையகப்படுத்துவதற்காக, உங்களில் முதல் நபர், இரண்டாவது நபர் முதல் எட்டு நபர் வரையிலானவர்களுடன் சேர்ந்து ஒரு ஏமாற்றும் மற்றும் தந்திரமான திட்டத்தைத் திட்டமிட்டார். உங்கள் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட மோசடித் திட்டத்தை செயல்படுத்துவதன் ஒரு பகுதியாக, குடும்பத்தின் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, குறிப்பாக எனது வாடிக்கையாளரின் தந்தையின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தபோது உங்களில் முதல் நபர் மற்றும் இரண்டாவது நபர் செப்டம்பர் 2003 இல் உங்கள் முதல் சட்டவிரோத நடவடிக்கையைத் தொடங்கினர்" என்று தயாநிதி மாறன் அனுப்பிய நோட்டீஸில் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நம்பிக்கை மீறல் மற்றும் மோசடி

மேலும் அந்த நோட்டீஸில் ''இறப்புச் சான்றிதழ் அல்லது சட்டப்பூர்வ வாரிசுச் சான்றிதழ் போன்ற தேவையான சட்ட ஆவணங்கள் இல்லாமல் பங்குகள் அவர்களின் தாயார் மல்லிகா மாறனுக்கு மாற்றப்பட்டன. இவை இரண்டும் பின்னர் மட்டுமே வழங்கப்பட்டன. இந்த ஆரம்ப பரிமாற்றம், இறுதியில் பங்குகளை கலாநிதியின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான ஒரு திட்டமிட்ட நடவடிக்கை. செப்டம்பர் 15, 2003 அன்று, கலாநிதி மாறன் ஒரு பங்கிற்கு ₹2,500 முதல் 3,000 வரை மதிப்பிடப்பட்ட சந்தை மதிப்பு இருந்தபோதிலும், 12 லட்சம் பங்குப் பங்குகளை ஒரு பங்கிற்கு ₹10 என்ற பெயரளவு விலையில் தனக்கு ஒதுக்கியதாகவும் அந்த அறிவிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளது. இதை "குற்றவியல் நம்பிக்கை மீறல் மற்றும் மோசடி" என்று நோட்டீஸ் விவரிக்கிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!