பழுதான பஸ்களை சரிசெய்யுங்கப்பா… - அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

By Asianet TamilFirst Published Jul 28, 2019, 8:11 AM IST
Highlights

வண்ண விளக்குகளால் அலங்கரிப்பதைவிட பழுதடைந்த பேருந்துகளை புதுப்பிக்க நடவடிக்கை எடுங்கள் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

வண்ண விளக்குகளால் அலங்கரிப்பதைவிட பழுதடைந்த பேருந்துகளை புதுப்பிக்க நடவடிக்கை எடுங்கள் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலை ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கு நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் அரசு வக்கீலிடம், புதிதாக இயக்கப்பட்டு வரும் மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் பல வண்ணங்களில் விளக்குகள் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இது எதிர் திசையில் வரும் இரு சக்கர வாகனங்களில் செல்வோரின் கவனத்தை திசை திருப்பி எதிரில் வரும் வாகனங்கள் மற்றும் பக்கத்தில் வரும் வாகனங்களை கவனிக்க முடியாத நிலையை ஏற்படுத்திவிடும்.

அரசு ஆம்னி பேருந்துகளை இயக்கவில்லை. இதுபோன்ற அலங்காரங்களுக்கு செலவிடுவதைவிட பழுதடைந்துள்ள பேருந்துகளை புதுப்பித்து இயக்கினால் பயணிகளுக்கு பயன் தரும். எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவியுங்கள் என்று உத்தரவிட்டனர்.

click me!