சென்னையில் கொரோனா வைரஸ் பரவ அதிக வாய்ப்புள்ள பகுதிகள்... பட்டியலை வெளியிட்ட மாநகராட்சி நிர்வாகம்..?

By vinoth kumarFirst Published Mar 29, 2020, 1:59 PM IST
Highlights

சென்னை மாநகராட்சி தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 300% கவனமாக இருக்க வேண்டும். ஒருபோதும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறக்கூடாது. தங்களுக்கு வேண்டிய ‌பொருட்களை பெற்றுக்கொள்ள அவர்களே ஏற்பாடு செய்துக்கொள்ள வேண்டும். வீட்டின் வெளியே ஒரு கூடையை வைத்து பொருட்களை அதன் மூலம் பெற வேண்டும் என சென்னை மாநகராட்சி நிர்வாகம் கூறியுள்ளது.

சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று அதிக பரவக்கூடிய பகுதிகளை சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.  இதனால், பொதுமக்கள் யாரும்  தேவையில்லாமல் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

சீனாவின் பிறப்பிடமான கொரோனா வைரஸ் 190-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை உலக முழுவதும் 30,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.  6.65 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், 1,33,057 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருவதால் மத்திய, மாநில அரகள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மேலும், கொரோனா பரவலைத் தடுக்க இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில்,  தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 2 லட்சத்து 9 ஆயிரத்து 284 பேருக்கு இதுவரை மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. அவா்களில், 13,323 பேர் தொடர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனா். 277 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். 1,500 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதில், 1252 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று தெரியவந்துள்ளது. 208 மாதிரிகள் சோதனையில் உள்ளன. 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், சென்னை மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கொரோனா வைரஸ் தொற்று அதிக பரவக்கூடிய பகுதிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அரும்பாக்கம், புரசைவாக்கம், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, மேற்கு மாம்பலம், சாந்தோம், ஆலந்தூர், போரூர், கோட்டூர்புரம் இந்த பகுதிகளில் வசிக்கும் அனைவரும் வீட்டிலேயே இருக்கவும் அடிப்படைத் தேவைகளுக்காக மட்டுமே வெளியே வரவும், எப்போதும் தங்கள் வீடுகளுக்குள் முகமூடியை அணிய வேண்டும் என்று கடுமையாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

சென்னை மாநகராட்சி தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 300% கவனமாக இருக்க வேண்டும். ஒருபோதும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறக்கூடாது. தங்களுக்கு வேண்டிய ‌பொருட்களை பெற்றுக்கொள்ள அவர்களே ஏற்பாடு செய்துக்கொள்ள வேண்டும். வீட்டின் வெளியே ஒரு கூடையை வைத்து பொருட்களை அதன் மூலம் பெற வேண்டும் என சென்னை மாநகராட்சி நிர்வாகம் கூறியுள்ளது.

click me!