எகிறும் பாதிப்பால் தடுமாறும் தலைநகரம்.. ராயபுரத்தில் ஒவராக ரவுசு பண்ணும் கொரோனா..!

By vinoth kumarFirst Published May 20, 2020, 1:29 PM IST
Highlights

தமிழகத்தில் ஆரம்பத்தில் அடக்கி வசித்து வந்த கொரோனா கடந்த சில நாட்களாக கோரத்தாண்டவம் ஆடிவருகிறது. நாளுக்கு நாள் உயிரிழப்பு மற்றும் பாதிப்பு எண்ணிக்கையும் ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே  போகிறது. 

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் ஆரம்பத்தில் அடக்கி வசித்து வந்த கொரோனா கடந்த சில நாட்களாக கோரத்தாண்டவம் ஆடிவருகிறது. நாளுக்கு நாள் உயிரிழப்பு மற்றும் பாதிப்பு எண்ணிக்கையும் ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே  போகிறது. 

இந்நிலையில், தமிழகத்தில் மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,448 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 4,895 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 552 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 7,672 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பின் எண்ணிக்கை 90ஆக உயர்ந்துள்ளது. 

இந்நிலையில், சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில், 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 1,423 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கோடம்பாக்கத்தில் 1,137, திரு.வி.க.நகரில் 900 , அண்ணாநகரில் 610, தண்டையார்பேட்டையில் 723, தேனாம்பேட்டையில் 822 , திருவொற்றியூரில் 182, வளசரவாக்கத்தில் 544,  பெருங்குடியில் 96 , அடையாறில் 413, அம்பத்தூரில் 330 , ஆலந்தூரில் 84 , மாதவரத்தில் 155 , சோழிங்கநல்லூரில் 109, மணலியில் 100 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

click me!