சத்தம் இல்லாமல் உயிரை எடுக்க தமிழகத்தில் நுழைந்த கொரோனா வைரஸ்... பீதியில் பொதுமக்கள்..!

By vinoth kumarFirst Published Feb 2, 2020, 4:31 PM IST
Highlights

சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் உள்ள வுகான் நகரில் இருந்து கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. இதன் தாக்குதலில் பாதிக்கப்படுவோர் மற்றும் உயிரிழந்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சீனா மட்டுமல்லாமல் உலக நாடுகளை இந்த வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. சீனாவை தவிர இந்தியா உள்ளிட்ட 18 நாடுகளில் 98 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா எவ்வாறு பரவுகிறது, எவ்வாறு அதிகமாகிறது என்பது குறித்து விஞ்ஞானிகள் தீவிர ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளனர். இதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. 

சென்னை ராஜூவ்காந்தி அரசு மருத்துவமனையில் 3 பேர் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் உள்ள வுகான் நகரில் இருந்து கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. இதன் தாக்குதலில் பாதிக்கப்படுவோர் மற்றும் உயிரிழந்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சீனா மட்டுமல்லாமல் உலக நாடுகளை இந்த வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. சீனாவை தவிர இந்தியா உள்ளிட்ட 18 நாடுகளில் 98 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா எவ்வாறு பரவுகிறது, எவ்வாறு அதிகமாகிறது என்பது குறித்து விஞ்ஞானிகள் தீவிர ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளனர். இதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. 

இந்நிலையில், இதுவரை யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பில்லை என்று கூறிவந்த நிலையில் தமிழகத்தில் இந்த நோய் பாதிப்புடன் மருத்துவமனையில் 6 பேர் அனுமதிக்கக்கட்டுள்ளனர். குறிப்பாக, சென்னை ராஜூவ்காந்தி அரசு மருத்துவமனையில் 3 பேரும், திருச்சி, ராமநாதபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒருவரும் தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து அவர்களின் உடல்நிலை ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் கண்காணித்து வருகின்றனர். 

இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில்;- சென்னையில் சிகிச்சை பெறுவோரில் ஒருவர் சீனாவைச் சேர்ந்தவர் லியோ விஜின். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சீனர் அதிக பாதிப்புடைய வுகான் நகருக்கு 100 கிலோமீட்டர் தொலைவில் இருந்து வந்தவர். மேலும் சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த இளைஞர் தவமணி என்பவருக்கும் கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் வுகான் நகரிலிருந்து வந்த மாணவி 20 நாட்களாக நோய் பாதிப்பு இல்லாமல் இருந்து வருகிறார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் இதுவரை 6 பேர் தமிழகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தகவல் தெரிவித்துள்ளார்.

click me!