சென்னையை அடுத்த வண்டலூர் அருகே உள்ள தனியார் பல்கலைக்கழக விடுதி மாணவர்கள் 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. விடுதி மாணவர்கள் சிலருக்கு சளி, காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, 3000 மாணவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 74 மாணவர்களுக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
சென்னை, வண்டலூர் அருகே உள்ள தனியார் பல்கலைக்கழக விடுதி மாணவர்கள் 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசு எடுத்த பல்வேறு அதிரடி நடவடிக்கையால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருந்து வருகிறது. ஆனால், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் விடுதியில் தங்கியிருந்து படிக்கும் மாணவர்களிடையே தொற்று பரவல் கடந்த சில நாட்களாக அதிகரித்து காணப்படுகிறது. தமிழக சுகாதாரத்துறை நேற்று இரவு வெளியிட்ட தகவலின்படி, மாநிலம் முழுவதும் 89 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு இருப்பதாக தெரிவித்திருந்தது. அதிக பட்சமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 46 பேருக்கும், சென்னையில் 33 பேர் உள்பட மொத்தம் 8 மாவட்டங்களில் தொற்று பரவல் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. இருப்பினும் தமிழகத்தில் 74-வது நாளாக கொரோனாவால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.
இந்நிலையில், சென்னையை அடுத்த வண்டலூர் அருகே உள்ள தனியார் பல்கலைக்கழக விடுதி மாணவர்கள் 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. விடுதி மாணவர்கள் சிலருக்கு சளி, காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, 3000 மாணவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 74 மாணவர்களுக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தொற்று பாதிக்கப்பட்ட 74 மாணவர்களும் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரே நேரத்தில் 74 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதை அடுத்து மீண்டும் ஊரடங்கு ஏற்படுமோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.