கொரோனா பாதிப்பு இன்னும் உயரும்.. யாரும் அச்சப்பட தேவையில்லை.. சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தகவல்..!

Published : Jun 04, 2020, 02:29 PM ISTUpdated : Jun 05, 2020, 11:58 AM IST
கொரோனா பாதிப்பு இன்னும் உயரும்.. யாரும் அச்சப்பட தேவையில்லை..  சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தகவல்..!

சுருக்கம்

மாஸ்க் அணிவதை மக்கள் அடுத்து ஒரு மாதத்திற்கு கட்டாயம் பின்பற்றினால் நோய் பரவலை தடுக்கலாம் என கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார். 

மாஸ்க் அணிவதை மக்கள் அடுத்து ஒரு மாதத்திற்கு கட்டாயம் பின்பற்றினால்  நோய் பரவலை தடுக்கலாம் என கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார். 

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி வளாகத்தில் ஆணையர் பிரகாஷ் உள்ளிட்ட அதிகாரிகளுடன் சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டிளித்த அவர்;- சென்னை நகர் முழுவதும் கொரோனா பரவுகிறது என பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம். அடுத்த ஒரு மாதத்திற்கும் மாஸ்க் அணிவதை முழுமையாக கடைபிடித்தால் தொற்றை கட்டுப்படுத்தலாம் என்றார். 

கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை கண்டு பொதுமக்கள் அச்சம் அடைய வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.  சென்னையில் திருவிக நகரில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தண்டையார்பேட்டை, ராயபுரம் பகுதிகள் சவாலானவைகளாக உள்ளன. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதுமான படுக்கை வசதிகள் உள்ளன என்றார். 

மேலும், பேசிய அவர் மாஸ்க் அணியாமல் வெளியே சுற்றினால் வழக்கு பதிவு செய்யப்படும் என எச்சரித்துள்ளார். தெருத்தெருவாக நோய் அறிகுறி உள்ளவர்களை கண்டறிந்து பரிசோதனை நடத்தப்படுகிறது. கொரோனா பகுதியில் தடுப்பை தாண்டி வெளியே வந்தால் வழக்கு பதிவு செய்து தனிமைப்படுத்த நேரிடும் என்று கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!