கொரோனா பரவல் அக்டோபர், நவம்பர் மாதங்களில் அதிகரிக்கும்.. பகீர் கிளப்பும் சென்னை மாநகராட்சி ஆணையர்..!

By vinoth kumarFirst Published Oct 8, 2020, 12:51 PM IST
Highlights

சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் வீடுகளில் தகரம் அடிப்பது 25 நாட்களுக்கு முன்பே நிறுத்தப்பட்டுவிட்டதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் வீடுகளில் தகரம் அடிப்பது 25 நாட்களுக்கு முன்பே நிறுத்தப்பட்டுவிட்டதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர்  கூட்டாக பேட்டியளிக்கையில்;- சென்னையில் ஒருசில மண்டலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கிறது. 100 பேருக்கு பரிசோதனை செய்தால் 10 பேருக்கு தொற்று உறுதியாகும் நிலை உள்ளது. 

கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்த காலத்தில் சென்னை மக்கள் மத்தியில் முகக்கவசம் அணிவது தீவிரமாக இருந்தது. ஆனால், முன்பை விட தற்போது அலட்சியம் ஏற்பட்டுள்ளது. முககவசம் அணியாதவர்களிடம் இருந்து இதுவரை ரூ.2.25 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. சுகாதார முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யாத ஓட்டல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இனிமேல் மாநகராட்சி, சுகாதாரத்துறை அதிகாரிகளின் நடவடிக்கை மிகவும் கடுமையாக இருக்கும் எனவும் கூறியுள்ளார்.

மேலும், கொரோனா பரவலில் அக்டோபர், நவம்பர் மாதங்கள் மிகவும் ஆபத்தானவை என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல் தெரிவித்தார். சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் வீடுகளில் தகரம் அடிப்பது 25 நாட்களுக்கு முன்பே நிறுத்தப்பட்டது என விளக்கமளித்துள்ளார்.

click me!