வரும் நாட்களில் கொரோனா பாதிப்பு 2000ஐ தாண்டும்.. அச்சம் வேண்டாம்.. சுகாதாரத்துறை செயலாளர் தகவல்..!

By vinoth kumarFirst Published Mar 26, 2021, 10:58 AM IST
Highlights

தமிழகத்தில் நடத்தப்பட்ட கொரோனா சோதனையில் இரட்டிப்பு மாற்றமடைந்த பாதிப்புகள் இதுவரை கண்டறியப்படவில்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

இதுவரை தமிழகத்தில் நடத்தப்பட்ட கொரோனா சோதனையில் இரட்டிப்பு மாற்றமடைந்த பாதிப்புகள் இதுவரை கண்டறியப்படவில்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

சென்னை ராஜூவ்காந்தி அரசு மருத்துவமனையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்;- தமிழகத்தில் கடந்த 2 வாரங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.  தமிழகத்தில் மக்கள் மாஸ்க் போடுவதை முழுமையாக தவிர்ப்பதால் தான் கொரோனா அதிகரிக்கிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். 

தமிழகத்தில் பரிசோதனைகளை அதிகரிக்க உள்ளதால் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2000 தாண்டக்கூடும். 25 லட்சம் கொரோனா தடுப்பூசி பயன்படுத்தியுள்ளோம். இன்னும் 10 லட்சம் தடுப்பூசி ஏப்ரல் முதல்வாரத்தில் வரும். தமிழக நகரங்களில் 1.22 லட்சம் தெருக்களில் 3,960ல் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், 1.28 லட்சம் கிராமப்புறங்களில் சுமார் 2 ஆயிரம் கிராமப்புறங்களில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

DOUBLE MUTANT கொரோனா இதுவரை தமிழகத்தில் கண்டறியப்படவில்லை. தமிழகத்தில் கொரோனா அதிகரிப்புக்கு வெளிநாட்டு கொரோனா பாதிப்பு காரணமில்லை. தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு செயல்படுத்த வாய்ப்பில்லை. அறிகுறிகள் இருந்தால் சுய மருத்துவம் செய்துகொள்ளாமல் மருத்துவமனையை அணுக வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். 

click me!