தமிழ்நாட்டில் கட்டுக்குள் வந்த கொரோனா பாதிப்பு; கட்டுக்கடங்காத உயிரிழப்பு..! இன்று உச்சபட்ச இறப்பு

Published : Aug 15, 2020, 06:29 PM IST
தமிழ்நாட்டில் கட்டுக்குள் வந்த கொரோனா பாதிப்பு; கட்டுக்கடங்காத உயிரிழப்பு..! இன்று உச்சபட்ச இறப்பு

சுருக்கம்

தமிழ்நாட்டில் இன்று மேலும் 5,860 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,32,105ஆக அதிகரித்துள்ளது.   

தமிழ்நாட்டில் இன்று மேலும் 5,860 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,32,105ஆக அதிகரித்துள்ளது. 

தமிழ்நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்தவகையில், இன்று 71343 பரிசோதனைகள் செய்யப்பட்டதில், 5860 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. எனவே தமிழ்நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,32,105ஆக அதிகரித்துள்ளது. 

சென்னையில் பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ள நிலையில், கடந்த ஒரு வாரமாக தினமும் ஆயிரத்துக்கும் குறைவான பாதிப்பே உறுதியான நிலையில், நேற்று மீண்டும் பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை கடந்த நிலையில், இன்றும் 1179 பேருக்கு தொற்று உறுதியானதால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 1,15,444ஆக அதிகரித்துள்ளது. மற்ற மாவட்டங்களிலும் பாதிப்பு குறைந்துவருகிறது. 

தமிழ்நாட்டில் அதிகமான பரிசோதனை செய்யப்படும் போதிலும், பாதிப்பு குறைந்துள்ளது. இது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்திருப்பதை உணர்த்தும் நிலையில், அதிகமானோர் குணமடைந்தும் வருவது இன்னொரு நல்ல செய்தி. இன்று 5236 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆனதையடுத்து மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 2,72,251ஆக அதிகரித்துள்ளது.

இன்று இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 127 பேர் உயிரிழந்ததையடுத்து, உயிரிழப்பு எண்ணிக்கை 5641ஆக அதிகரித்துள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

டேட்டா திருடும் ஏர்டெல்..! 100mbps க்கு வெறும் 40 தான் கிடைக்குது.. சென்னையில் ஷோரூம் முன்பு போராட்டம்..
தினமும் 20 மாத்திரைகள் சாப்பிடுகிறேன்! உருக்கமாக பேசிய நடிகை மீரா மிதுன்! அதிரடி காட்டிய கோர்ட்!