கோவையில் இன்று ஒரே நாளில் 29 பேருக்கு கொரோனா.. மாவட்ட வாரியாக முழு விவரம்

Published : Apr 05, 2020, 07:15 PM IST
கோவையில் இன்று ஒரே நாளில் 29 பேருக்கு கொரோனா.. மாவட்ட வாரியாக முழு விவரம்

சுருக்கம்

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் மேலும் 86 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதால் பாதிப்பு எண்ணிக்கை 571ஆக அதிகரித்துள்ள நிலையில், மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை பார்ப்போம்.  

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தினம் தினம் புதிய உச்சத்தை எட்டிவருகிறது. டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்களை கண்டறிந்து பரிசோதித்த பின்னர், தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு மளமளவென உயர்ந்துள்ளது. 

நேற்று வரை தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 485ஆக இருந்த நிலையில், இன்று ஒரே நாளில் மேலும் 86 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இந்த 86 பேரில் 85 பேர் டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டு திரும்பியவர்கள். ஒருவர் துபாயிலிருந்து வந்தவர் ஆவார்.

இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 86 பேரில் 29 பேர் கோவை மாவட்டத்தை சேர்ந்தவர்கள். அதனால் கோவையில் கொரோனா பாதிப்பு 58ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் கொரோனா பாதிப்பில் சென்னை(95) தான் முதலிடத்தில் உள்ளது. கொரோனா பாதிப்பில் இந்தியாவில் மகாராஷ்டிராவுக்கு(661) அடுத்த இடத்தில் தமிழ்நாடு(571) உள்ளது. 

தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையை மாவட்ட வாரியாக பார்ப்போம்.

சென்னை - 95

கோவை - 58

திண்டுக்கல் - 45

திருநெல்வேலி - 38

ஈரோடு - 32

நாமக்கல், ராணிப்பேட்டை - 25

தேனி, கரூர் - 23

செங்கல்பட்டு - 22

மதுரை - 19

திருச்சி - 17

விழுப்புரம் - 15

திருவாரூர், சேலம், திருவள்ளூர் - 12

விருதுநகர், தூத்துக்குடி, நாகை  - 11

திருப்பத்தூர், கடலூர் - 10

திருவண்ணாமலை - 8

கன்னியாகுமரி - 6

சிவகங்கை, வேலூர், தஞ்சாவூர் - 5

காஞ்சிபுரம், நீலகிரி - 4

திருப்பூர் - 3

ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி - 2

பெரம்பலூர் - 1.
 

PREV
click me!

Recommended Stories

Deep Sleep Mode-க்கு சென்ற CM Vijay – உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம்
Chennai Parandur Airport : பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து! ரூ.50,000 கோடி இழப்பா? விஜய் அரசின் அடுத்த பிளான் என்ன?