சென்னையில் ஒரு வாரமாக குறையும் கொரோனா பாதிப்பு... மற்ற மாவட்டங்களில் எகிறும் பாதிப்பு... உஷாரா இருங்க மக்களே!

By Asianet TamilFirst Published Jul 8, 2020, 7:33 AM IST
Highlights

நேற்றைய பாதிப்பு சென்னையில் 1,203 ஆக இருந்தது. இதன் மூலம் சென்னையில் கொரோனா தொற்று படிபடியாகக் குறைந்து வருவதை காண முடிகிறது. கடந்த ஜூன் 19ம் தேதி முதல் ஜூலை 5ம் தேதி வரை சென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனா பாதிப்பு சென்னையில் சற்று குறைய அதுவும் ஒரு காரணம். 

தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், சென்னையில் குறையத் தொடங்கியிருக்கிறது.
தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 18 ஆயிரத்து 594 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 1,636 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை 71 ஆயிரத்து 116 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 45 ஆயிரத்து 839 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து 4 ஆயிரத்து 545 பேர் நேற்று குணமடைந்தனர்.
 தமிழகத்தில் ஜூலை 7 அன்று சென்னையில் 1,203 பேரும், மதுரையில் 334 பேரும், விருதுநகரில் 253 பேரும், திருவள்ளூரில் 217 பேரும், நெல்லையில் 181 பேரும், தூத்துக்குடியில் 144 பேரும், ராணிப்பேட்டையில் 125 பேரும், கன்னியாகுமரியில் 119 பேரும், வேலூரில் 117 பேரும், காஞ்சீபுரத்தில் 106 பேரும், திருவண்ணாமலையில் 99 பேரும், தேனியில் 94 பேரும், செங்கல்பட்டில் 87 பேரும், கடலூரில் 65 பேரும், தென்காசியில் 62 பேரும், திருச்சியில் 55 பேரும், சேலத்தில் 52 பேரும், புதுக்கோட்டையில் 43 பேரும், திருப்பத்தூரில் 40 பேரும், கோவையில் 36 பேரும், தஞ்சாவூரில் 34 பேரும், கள்ளக்குறிச்சியில் 28 பேரும், திருவாரூரில் 23 பேரும், ராமநாதபுரத்தில் 22 பேரும், திருப்பூரில் 17 பேரும், சிவகங்கையில் 15 பேரும், திண்டுக்கலில் 7 பேரும், நாமக்கல், நீலகிரியில் தலா 5 பேரும், கரூர், நாகப்பட்டினம், தர்மபுரியில் தலா 4 பேரும், கிருஷ்ணகிரியில் இருவரும், விழுப்புரத்தில் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சென்னையில் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த கொரோனா பாதிப்பு சற்று குறையத் தொடங்யிருக்கிறது. கடந்த மாதம் 12ம் தேதி சென்னையில் 1242 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அதன்பின்னர் சென்னையில் ஒவ்வொரு நாளும் எண்ணிக்கைக் கூடிக்கொண்டே சென்றது. சென்னையில் உச்சபட்சமாக ஜூன் 30 அன்று 2393 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். கடந்த ஒரு வார காலமாக சென்னையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவருகிறது.


அந்த வகையில் நேற்றைய பாதிப்பு சென்னையில் 1,203 ஆக இருந்தது. இதன் மூலம் சென்னையில் கொரோனா தொற்று படிபடியாகக் குறைந்து வருவதை காண முடிகிறது. கடந்த ஜூன் 19ம் தேதி முதல் ஜூலை 5ம் தேதி வரை சென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனா பாதிப்பு சென்னையில் சற்று குறைய அதுவும் ஒரு காரணம். பொதுமக்கள் தொடர்ந்து சமூக இடைவெளியைக் கடைபிடித்தல், முகக் கவசம் அணிதல், கைகளை சோப்பு நீரால் கழுவுதல் போன்றவற்றைப் பின்பற்றினால், இன்னும் பாதிப்புகள் குறையயும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகிறார்கள். சென்னையில் ஒரு வாரமாகப் பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துள்ள நிலையில், மற்ற மாவட்டங்களில் பாதிப்பு அதிககரிக்கத் தொடங்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!