தமிழகத்தில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு... சென்னையிலும் குறைந்த பாதிப்பு பதிவு...!

Published : Oct 20, 2020, 09:34 PM IST
தமிழகத்தில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு... சென்னையிலும் குறைந்த பாதிப்பு பதிவு...!

சுருக்கம்

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை இன்று 3,094 ஆக குறைந்துள்ளது.  

தமிழகத்தில் இன்று 78,903 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,094 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில தினங்களாக 4 ஆயிரத்துக்கும் குறைந்த அளவில் கொரோனா பாதிப்பு பதிவாகிவருகிறது. இன்றும் 3,094 என குறைந்த அளவில் பதிவானது. இதன்மூலம், கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 6,94,030 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 50 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதுவரை தமிழகத்தில் 10,741 பேர் உயிரிழந்துள்ளனர்.


அதே வேளையில் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு இன்று மட்டும் 4,403 பேர் வீடு திரும்பினர். தமிழகத்தில் இதுவரை 6,46,555 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். இன்று சென்னையிலும் குறைந்த எண்ணிக்கையில் கொரோனா பாதிப்பு பதிவானது. சென்னையில் இன்று 857 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

பொங்கல் பண்டிகை அதுவுமா! மெட்ரோ ரயில் சேவையில் அதிரடி மாற்றம்! இதோ முழு விவரம்!
சென்னையை சுற்றி பார்க்க சூப்பர் வாய்ப்பு.. 50 ரூபாய் இருந்தால் போதும்.. அமைச்சர் சொன்ன குட்நியூஸ்!