தமிழகத்தில் அசுர வேகத்தில் பரவும் கொரோனா..! உச்சம் தொடும் பாதிப்பு..! நாளை 9000-ஐ தொடும் அபாயம்!

Published : May 12, 2020, 08:01 PM ISTUpdated : May 12, 2020, 08:06 PM IST
தமிழகத்தில் அசுர வேகத்தில் பரவும் கொரோனா..! உச்சம் தொடும் பாதிப்பு..! நாளை 9000-ஐ தொடும் அபாயம்!

சுருக்கம்

தமிழ்நாட்டில் கடந்த இரண்டு வாரங்களாகவே கொரோனாவினால் பாதிக்கப்படுபவர்கள், எண்ணிக்கை அதிகபட்சம் 500 நபர்களுக்கு குறையாமல் உள்ளது. ஏற்கனவே கோயம்பேடு சந்தையால், தமிழகத்தின் மற்ற மாவட்டங்களுக்கும் பாதிப்பு அதிக அளவில் பரவியுள்ளது

தமிழ்நாட்டில் கடந்த இரண்டு வாரங்களாகவே கொரோனாவினால் பாதிக்கப்படுபவர்கள், எண்ணிக்கை அதிகபட்சம் 500 நபர்களுக்கு குறையாமல் உள்ளது. கோயம்பேடு சந்தையால், தமிழகத்தின் மற்ற மாவட்டங்களுக்கும் பாதிப்பு அதிக அளவில் பரவியுள்ளது. எனவே இதனை கட்டுப்படுத்தும் முயற்சிகளை அரசு தரப்பில் மேற்கொண்டு வந்தாலும், கொரோனா எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது.  

தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட, தலைநகர் சென்னையில் தினமும் பாதிப்பு எண்ணிக்கை கூடி கொண்டே செல்கிறது.   

நேற்று மட்டும் தமிழகத்தில், மொத்தம் 798 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனவினால் தமிழகத்தில் மட்டும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8002ஆக அதிகரித்தது. 

இதை தொடர்ந்து இன்று  கொரோனா பாதித்தவர்கள் பற்றிய தகவலை, தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.  இதில் இன்று ஒரே நாளில், 716 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8718 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில், 427 பேர் ஆண்கள் என்றும், 228 பேர் பெண்கள் என்றும் மேலும் ஒருவர் மூன்றாம் பாலினத்தவர் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.  ஊரடங்கில் சில தளர்வுகள் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளதால் கொரோனா எண்ணிக்கை அதிகரிக்குமா என்கிற அச்சமுமும் மக்களிடம் ஏற்பட்டுள்ளது. இதே நிலை நாளையும் நீடித்தால், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் மொத்த எண்ணிக்கை நாளை 9000 தொடும் அபாயமும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

சென்னையில் 8 மாடிகள் கொண்ட BSNL அலுவலகத்தில் தீ விபத்து! அலறி அடித்து ஓடிய ஊழியர்கள்.! நடந்தது என்ன?
தூய்மை பணியாளர்களுக்கு இனி கவலையே இல்ல.. 200 வார்டிலும் வருது சூப்பர் ஓய்வறைகள்!