தமிழகத்தில் 3 மாதத்துக்கு பிறகு கொரோனா 2வது அலை ஆரம்பிக்கலாம்.. மருத்துவ குழு அதிர்ச்சி தகவல்..!

Published : Jun 15, 2020, 02:07 PM IST
தமிழகத்தில் 3 மாதத்துக்கு பிறகு கொரோனா 2வது அலை ஆரம்பிக்கலாம்.. மருத்துவ குழு அதிர்ச்சி தகவல்..!

சுருக்கம்

அரசு நடவடிக்கைகள் எடுத்தாலும் மாஸ்க், தனிமனித இடைவெளி போன்றவை மூலம்தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் முதல்வருடனான ஆலோசனைக்கு பிறகு மருத்துவக் குழுவினர் கூறியுள்ளனர்.

அரசு நடவடிக்கைகள் எடுத்தாலும் மாஸ்க், தனிமனித இடைவெளி போன்றவை மூலம்தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் முதல்வருடனான ஆலோசனைக்கு பிறகு மருத்துவக் குழுவினர் கூறியுள்ளனர். 

கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன்  முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். பின்னர், மருத்துவக் குழுவினர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- தமிழகத்தில் உச்சம் தொட்ட கொரோனா குறைய ஆரம்பித்தாலும் 3 மாதத்துக்கு பின் மீண்டும் அதிகரிக்கும் என கூறியுள்ளனர். 

மேலும், சீனாவில் 2வது அலை ஆரம்பித்தது போல் தமிழகத்திலும் 3 மாதத்துக்கு பின் ஆரம்பிக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்தனர். அரசு நடவடிக்கைகள் எடுத்தாலும் மாஸ்க், தனிமனித இடைவெளி போன்றவை மூலம்தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். தலைவலி, காய்ச்சல் ஏற்பட்டால் அலட்சியப்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர். 

நோய் அதிகம் பாதித்த இடங்களில் கட்டுப்பாடுகளை கடுமையாக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.  எந்த ஒரு நோயும் உச்சத்திற்கு சென்றுதான் படிப்படியாக குறையும். நாட்டிலேயே தமிழகத்தில் பரிசோதனை அதிகம். அதனால் தான் தொற்றும் அதிகம். சென்னையில் 17,500 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. ஊரடங்கை கட்டுப்படுத்தி நோயின் தீவிரத்தை குறைக்க பரிந்துரை செய்து உள்ளோம் என்றனர். தளர்வுகளால் நோய்த் தொற்று அதிகரித்துள்ளதாக மருத்துவர் குழு தகவல் தெரிவித்துள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

சென்னையில் அதிர்ச்சி.. காதல் திருமணம் செய்த 9 நாட்களில் மனைவி கொ*லை.. கணவர் விபரீத முடிவு.. நடந்தது என்ன?
காரை முற்றுகையிட்ட அஜிதா... நிற்காமல் சென்ற விஜய் - பனையூர் தவெக அலுவலகத்தில் பரபரப்பு