சென்னை ஐஐடியில் தொடரும் தற்கொலைகள்… மீண்டும் ஒரு மாணவர் தற்கொலை!!

By Narendran S  |  First Published Apr 21, 2023, 6:08 PM IST

சென்னை ஐஐடி வளாகத்தில் பி.டெக். 2 ஆம் ஆண்டு படிக்கும் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


சென்னை ஐஐடி வளாகத்தில் பி.டெக். 2 ஆம் ஆண்டு படிக்கும் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி வளாகத்தில் பி.டெக். 2 ஆம் ஆண்டு படித்து வருபவர் கேதார் சுரேஷ். இவர் மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர் என கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர் கல்லூரி விடுதியில் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதையும் படிங்க: 10ம் வகுப்பு தேர்வு நிறைவடைந்த சந்தோசத்தில் கடலில் குளித்த மாணவன் நீரில் மூழ்கி பலி

Tap to resize

Latest Videos

தகவலறிந்த வந்த காவல்துறையினர் உயிரிழந்த மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த மாணவனின் அறையில் தற்கொலை கடிதம் ஏதேனும் உள்ளதா என ஆய்வு செய்தனர். மேலும் மாணவர் தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: தொழிலாளர்களின் வேலை நேரம் 12 மணி நேரமாக உயர்வு! சட்டப்பேரவையில் நிறைவேறிய மசோதா-வெளிநடப்பு செய்த எதிர்கட்சிகள்

ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் பிடெக் 3 ஆம் ஆண்டு படித்து வந்த ஆந்திராவை சேர்ந்த புஷ்பக் என்ற மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட நிலையில் தற்போது மீண்டும் ஒரு மாணவர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!