மெட்ரோ ரயிலில் இனி சுலபமா பயணம் செய்யலாம்.. - அதிரடி திட்டங்கள் அறிமுகம்!!

Published : Aug 27, 2019, 05:13 PM ISTUpdated : Aug 27, 2019, 05:16 PM IST
மெட்ரோ ரயிலில் இனி சுலபமா பயணம் செய்யலாம்.. - அதிரடி திட்டங்கள் அறிமுகம்!!

சுருக்கம்

மெட்ரோ ரயிலில் தற்போது பயணிகள் கூட்டம் அதிகம் இருப்பதை கருத்தில் கொண்டு அதிக ரயில்கள் விடப்பட்டுள்ளதாக நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயிலில் காலை மற்றும் மாலை நேரங்களில் கூட்டம் அதிகம் காணப்படுகிறது. வேலைக்கு செல்பவர்கள் பலர் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். கூட்டம் அதிகம் இருப்பதால் பலர் நின்று கொண்டு பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.

இதை கருத்தில் கொண்டு மெட்ரோ ரயில் நிர்வாகம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி வண்ணாரப்பேட்டை - விமான நிலையம் இடையிலான வழித்தடத்தில் இனி காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் 5 நிமிடங்களுக்கு ஒருமுறை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற நேரங்களில் 7 நிமிடங்களுக்கு ஒருமுறை இயக்கப்பட இருக்கிறது.

அதே போல சென்னை சென்ட்ரல் - மவுண்ட் ரயில் நிலையம் இடையே காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் 10 நிமிடங்களுக்கு ஒருமுறை மெட்ரோ ரயில் இயக்கப்பட இருக்கிறது.

PREV
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!