சென்னையில் அதிர்ச்சி.. வீட்டில் தனியாக இருந்த 11 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை.. போலீசார் விசாரணையில் பகீர்.!

Published : Jul 11, 2021, 07:20 PM ISTUpdated : Jul 11, 2021, 07:24 PM IST
சென்னையில் அதிர்ச்சி.. வீட்டில் தனியாக இருந்த 11 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை.. போலீசார் விசாரணையில் பகீர்.!

சுருக்கம்

சென்னையில் 6ம் வகுப்பு படிக்கும் சிறுமி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் 6ம் வகுப்பு படிக்கும் சிறுமி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை ஆதம்பாக்கம் மோகனபுரி 4-வது தெருவில் வசித்து வருபவர் வெங்கம்மாள். கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வசித்து வருகிறார். இவருக்கு 16-வயதில் ஒரு மகனும், 6ம் வகுப்பு படிக்கும் ஜெயந்தி என்ற மகளும் (12) உள்ளனர். இந்நிலையில், நேற்று மாலை வீட்டில் அண்ணனும், தங்கையும் மட்டும் இருந்துள்ளனர். அப்போது வீட்டில் ஒரேயொரு அறை இருப்பதால், ஜெயந்தி தான் துணி மாற்றப் போவதாக கூறி அண்ணனை வெளியே அனுப்பியுள்ளார்.

 

இதையடுத்து வெளியே சென்ற அண்ணன், வெகுநேரம் ஆகியும் தங்கை கதவை திறக்கவில்லை. இதனால், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்த போது ஜெயந்தி மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு சிறுமி பூப்படைந்ததாகவும், இந்நிலையில் நேற்று வயிற்று வலி அதிகம் இருந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

PREV
click me!

Recommended Stories

ரம்யா கிருஷ்ணனை அசிங்கப்படுத்திய சத்யராஜ் மகள்..! தரையில் இறங்கி அடிப்பவர் தான் உண்மையான தலைவர் என பேச்சு
போதையில் தாறுமாறாக ஓடிய கார்! விரட்டி சென்ற காவலர் உயிரி*ழப்பு! இளைஞரை HIT and RUN பிரிவில் தூக்கிய போலீஸ்!