
செட்டிநாடு குழுமத்திற்கு சொந்தமான, சென்னை, ஐதராபாத், மும்பை உள்ளிட்ட 50 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் மிக முக்கியமானது செட்டிநாடு குழுமமானது சிமெண்ட், போக்குவரத்து, மருத்துவமனை, கல்வி நிலையங்கள், மின் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் சென்னை, கரூர், காஞ்சிபுரம், ஐதராபாத், மும்பை உள்ளிட்ட 50 இடங்களில் 200க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இன்று காலை 8 மணி முதல் இந்த வருமான வரி சோதனை நடத்தபட்டு வருகிறது. இதில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்னரும் செட்டிநாடு குழும நிறுவனங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டு ரொக்கப் பணம், நகைகள் உள்ளிட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.