திருமணமாகி 24 நாட்களில் துயரம்... கணவர் உயிரிழந்த ஓய்வறையை பார்த்து கதறிய மனைவி... மனதை பதறவைத்த காட்சிகள்..!

By vinoth kumarFirst Published Jul 29, 2019, 10:49 AM IST
Highlights

திருமணமாகி 24 நாட்கள் ஆன நிலையில் கணவர் பாரதி உயிரிழந்த ஓய்வறையை பார்த்து மனைவி நாகேஸ்வரி கதறி அழுத காட்சி அங்கு இருந்தவர்களின் மனதை பதறவைத்தது.

திருமணமாகி 24 நாட்கள் ஆன நிலையில் கணவர் பாரதி உயிரிழந்த ஓய்வறையை பார்த்து மனைவி நாகேஸ்வரி கதறி அழுத காட்சி அங்கு இருந்தவர்களின் மனதை பதறவைத்தது.

சென்னை வடபழனி அரசு பேருந்து போக்குவரத்து பணிமனையில் நள்ளிரவில் 12.40 மணியளவில் ஊழியர்கள் பணிகளை முடித்து கொண்டு பணிமனையில்  இருந்த ஓய்வறையில் அமர்ந்து இருந்துள்ளனர். அப்போது ஓய்வறையின் அருகே அமைந்திருக்கும் பேருந்து பழுதுபார்க்கும் இடத்திலிருந்து பேருந்து இயக்கப்பட்ட போது, எதிர்பாராவிதமாக பேருந்து தன் கட்டுப்பாட்டை இழந்து சுவரின் மீது மோதி நின்றுள்ளது, இதில்,  பணிமனை ஓய்வறையில் இருந்த ஓய்வெடுத்துகொண்டிருந்த ஊழியர்கள் 7 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தீயணைப்புத்துறையினருக்கு  தகவல் தெரிவிக்கப்பட்டது. 

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள காட்டூச்சித்தாமூர் பச்சையம்மன் கோயில் தெருவை சேர்ந்த தொழில்நுட்ப பிரிவு ஊழியர் பாரதி(33), சாலிகிராமம் மதியழகன் நகரை சேர்ந்த தொழில்நுட்ப பிரிவு ஊழியர் சேகர் (49) ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் உயிரிழந்த பாரதி என்பவருக்கு கடந்த 24 நாட்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. அந்த குடும்பத்தை மீளாத்துயரில் ஆழ்த்தி இருக்கிறது பாரதியின் உயிரிழப்பு. திருமணமாகி ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் கணவரை பறிகொடுத்து விட்டார் அந்த இளம்பெண். மேலும், கணவர் உயிரிழந்த ஓய்வறையை பார்த்து கதறி அழுத காட்சி அங்கு இருந்தவர்களை சோகத்தில் ஆழத்தியது. 

அப்போது நாகேஸ்வரி கூறியதாவது: எனது கணவருக்கு அதிகாரிகள் திருமணத்திற்கு ஒரு வாரம் மட்டுமே விடுமுறை அளித்தனர். எங்கள் திருமணம் முடிந்த மறுநாளே எனது கணவர் பணியில் சேர்ந்து கையெழுத்து போட்டார். திருமணத்திற்காக எனது கணவர் ஒரு மாதம் மருத்துவ விடுப்பு கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தார். ஆனால் அவருக்கு உயர் அதிகாரிகள் ஒரு வாரம் மட்டுமே விடுமுறை அளித்தனர். நேற்று பணிக்கு வந்த பிறகு நான் எனது கணவருக்கு இரவு 8 மணியில் இருந்து 9 மணி வரை போன் செய்தேன். ஆனால் அவர் எனது போனை எடுக்கவில்லை. அந்த அளவுக்கு பணி சுமை இருந்துள்ளது. போக்குவரத்து துறையில் முக்கியமான பணியான தொழில்நுட்ப ஊழியர்களின் ஓய்வு அறை தரமற்ற வகையில் உள்ளது. எனது கணவரின் இறப்புக்கு அரசு உரிய பதில் அளிக்க வேண்டும் இவ்வாறு நாகேஸ்வரி கண்ணீர் மல்க கூறினார். 

click me!