செல்ஃபியால் உயிரிழக்கவில்லை... காதலி மரணத்தை தாங்க முடியால் கதறிய படி பரபரப்பு தகவலை வெளியிட்ட காதலன்..!

By vinoth kumarFirst Published Nov 6, 2019, 6:24 PM IST
Highlights

விவசாயக் கிணற்றைப் பார்த்த மெர்சி உள்ளே இறங்கி தண்ணீரைக் காலால் தொடுவோம் என்றாள். உடனே நான் எனக்கு நீச்சல் அவ்வளவாகத் தெரியாது வேண்டாம் என்றேன். அதற்கு மெர்சி, “இந்தக் காலத்தில் லவ்வருக்காக எதையும் செய்கிறார்கள். நீ என்னுடைய ஆசைக்காக கிணற்றில் இறங்க மாட்டாயா? எனக் கூறியுள்ளார்.

செல்ஃபி எடுக்க முயன்றதால் கிணற்றுக்குள் விழுந்து இளம்பெண் மெர்சி உயிரிழக்கவில்லை என்று உயிர் பிழைத்த இளைஞர் கண்ணீருடன் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.  

சென்னை ஆவடியை அடுத்த பட்டாபிராம், நவஜீவன் நகரைச் சேர்ந்தவர் தாஸ். இவருடைய மகன் அப்பு(24). பட்டாபிராம் காந்திநகர் 1-வது தெருவைச் சேர்ந்தவர் தாமஸ். இவருடைய மகள் மெர்சி (22). உறவினர்களான இவர்கள் இருவரும் அம்பத்தூர் எஸ்டேட்டில் உள்ள வெவ்வேறு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். அப்புவுக்கும், மெர்சிக்கும் திருமணம் செய்ய இருவீட்டு பெற்றோரும் முடிவு செய்தனர். செப்டம்பர் மாதம் இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஜனவரி மாதம் இவர்களுக்கு திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

இந்நிலையில் கடந்த 4-ம் தேதி இருவரும் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பினர். செல்லும் வழியில் முத்தாபுதுபேட்டை, கண்டிகை பகுதியில் விவசாய நிலத்தில் உள்ள கிணற்றுக்குள் இறங்கியுள்ளனர். அப்போது இருவரும் தவறி கிணற்றுக்குள் விழுந்ததில் மெர்சி நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்நிலையில், சம்பவத்தன்று என்ன நடந்தது என்பதை தொடர்பாக அவரது காதலன் கண்ணீருடன் தகவல் தெரிவித்துள்ளார். “நிச்சயத்துக்குப் பிறகு என்னிடம் கணவர் என்ற உரிமையாக பழகி வந்த மெர்சி கடந்த 4-ம் தேதி என்னுடைய வீட்டிற்கு வந்திருந்தாள். அப்போது அவள் வெளியே செல்லலாம் எனக் கூறியதால் இருசக்கர வாகனத்தில் அவளை அழைத்துக்கொண்டு வெளியே சென்றேன். நெமிலிச்சேரி பைபாஸ் அருகே சென்றுகொண்டிருந்தபோது மெர்சி அங்கிருந்த வயலில் நாம் ஃபோட்டோ எடுக்கலாம் என்றாள்.

ஆகையால், இருவரும் கண்டிகை பகுதியில் உள்ள வயலுக்குச் சென்றோம். அங்கு இருந்த விவசாயக் கிணற்றைப் பார்த்த மெர்சி உள்ளே இறங்கி தண்ணீரைக் காலால் தொடுவோம் என்றாள். உடனே நான் எனக்கு நீச்சல் அவ்வளவாகத் தெரியாது வேண்டாம் என்றேன். அதற்கு மெர்சி, “இந்தக் காலத்தில் லவ்வருக்காக எதையும் செய்கிறார்கள். நீ என்னுடைய ஆசைக்காக கிணற்றில் இறங்க மாட்டாயா? எனக் கூறியுள்ளார். இதனால், தன் உயிரையும் பொருட்படுத்தாமல் நான் கிணற்றில் இறங்கினேன். 

என்னை பார்த்துக்கொண்டு சிரித்தபடியே படிக்கட்டில் இறங்கிய போது கால் தவறியதில் கிணற்றுக்குள் விழுந்து தண்ணீரில் மூழ்கினாள். ஆனால், மெர்சியை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் எண்ணி நான் தண்ணீருக்குள் மெர்சியை தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. பின் தண்ணீருக்கு மேலே வந்த நான் காப்பாற்றுங்கள் என கத்தியதைக் கேட்டு வந்த ஒரு தாத்தா அருகிலிருந்த டியூப் ஒன்றைக் கொடுத்து என்னைக் காப்பாற்றினார். மேலே வந்த நான் மெர்சியும் கிணற்றுக்குள் விழுந்ததைக் கூற அவர் தனக்கும் நீச்சல் தெரியாது எனக் கூறினார். அதற்குள் நான் மயங்கிவிட்டேன் எனக் கூறியுள்ளார். இதனையடுத்து, அவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நினைவு திரும்பிய பின்பு தான் மெர்சி இறந்தது தெரியவந்தது என்றார். மேலும், செல்ஃபி எடுக்க முயன்றதால் மெர்சி உயிரிழக்கவில்லை என்று கண்ணீருடன் தெரிவித்துள்ளார். 

click me!