தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும்.
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாம்பரம், அண்ணாசாலை உள்ளிட்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க;- மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி? முழு விவரம் உள்ளே!!
undefined
தாம்பரம்:
கடப்பேரி எம்.சி.ராஜா தெரு, ரெட்டைமலை சீனிவாசன் தெரு, பழைய பெரியபாளையத்தம்மன், லட்சுமண் நகர் இடிஎல் காமகோடி நகர், விஜிபி சாந்தி நகர், இளங்கோ தெரு, லேபர் காலனி, கவிமணி தெரு, காந்தி தெரு, மனோகர் நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
அண்ணாசாலை:
ஒயிட்ஸ் சாலையின் ஒரு பகுதி, ஐடிசி ஹோட்டல், ஜி.பி. ரோடு, ஈ.பி. லிங்க் ரோடு, எக்ஸ்பிரஸ் அவென்யூ, டிரான்ஸ்கோ பில்டிங், மதுரா வங்கி, ராணி மேனியம்மை ஹாஸ்டல் & திருமண மண்டபம், மான்டியத் ரோடு, தாஜ் ஹோட்டல் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள் அடங்கும்.
அடையார்:
ஈஞ்சம்பாக்கம் பாரதி அவென்யூ, விஜிபி லே அவுட், விமலா கார்டன், பெரியார் தெரு, டிவிஎஸ் அவென்யூ, அக்கரை கிராமம், குணால் தோட்டம், ஈஞ்சம்பாக்கம் குப்பம், வேளச்சேரி ராஜ்பவன், அண்ணா கார்டன், காந்தி சாலை, ராஜலட்சுமி நகர், அய்யா பிளாட், 6வது தெரு தண்டீஸ்வரன் மெயின் ரோடு மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள் அடங்கும்.
போரூர்:
பூந்தமல்லி ஜெ.ஜெ.நகர், குமரன் நகர், லீலாவதி நகர், ஏரிக்கரை சாலை, ஆவடி பிரதான சாலையின் ஒரு பகுதி மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க;- சென்னையில் அதிர்ச்சி.. ஒரே புடவையில் காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை.. இப்படி அவசரப்பட்டுடிங்களே.. கதறிய தாய்.!