ஜெயராமன் பொறியியல் கல்லூரியில் படிக்கும் போதே யுவராணி (26) என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர் சோழிங்கநல்லூரில் வேலை பார்த்து வந்தார். கிட்டதட்ட இந்த பெண்ணை சுமார் 6 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்துள்ளார்.
ஒரே புடவையில் காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதல் ஜோடி தற்கொலைக்கான காரணமும் வெளியாகியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன் (29). பட்டதாரியான இவர் பெருங்களத்தூர் அடுத்த பீர்க்கன்காரணை கண்ணன் தெருவில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர் தாம்பரம் சானிடோரியம் மெப்ஸ் வளாகத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், ஜெயராமன் பொறியியல் கல்லூரியில் படிக்கும் போதே யுவராணி (26) என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர் சோழிங்கநல்லூரில் வேலை பார்த்து வந்தார். கிட்டதட்ட இந்த பெண்ணை சுமார் 6 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க;- பிரியாவை போன்று மற்றொரு சம்பவம்.. கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்ட 8வது நாளில் இளம்பெண் உயிரிழப்பு.!
undefined
இவர்கள் காதலுக்கு யுவராணி பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து அவருக்கு மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர். இதனால், மனவேதனையில் இருந்து வந்த யுவராணி ஜெயராமனின் தாயார் மற்றும் சகோதரர் வேலைக்கு சென்றுவிட்ட நிலையில் பீர்க்கன்காரணையில் காதலன் வீட்டுக்கு வந்துள்ளார். இந்நிலையில், ஜெயராமனின் வீட்டிற்கு வந்த யுவராணி ஆன்லைன் மூலம் மதிய உணவு ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளனர். இதனையடுத்து, மாலை வேலை முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்த போது காதலர்கள் 2 பேரும் ஒரே புடவையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சியடைந்து அலறி கூச்சலிட்டார்.
உடனே இந்த சம்பவம் தொடர்பாக பீர்க்கன்காரணை போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் இவர்களது காதலுக்கு யுவராணி வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. ஒரே புடவையில் காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க;- மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி? முழு விவரம் உள்ளே!!