தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும்.
சென்னையில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கிண்டி, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க:
undefined
அண்ணா பூங்கா (ராயபுரம்):
எம்சி ரோடு, தொப்பை தெரு, ஆடம் தெரு, அத்தான் ரோடு, பிசி பிரஸ் ரோடு, எம்எஸ் கோவில், ராபின்சன் பார்க், பிஸ்சண்டி லேன், பனைமர தொட்டி, கிழக்கு மாதா தெரு, மேற்கு மாதா தெரு, மர்யதாஸ் தெரு மீனாட்சியம்மா பேட்டை.
கிண்டி:
வானுவம்பேட்டை சரஸ்வதி நகர் பகுதி, ஏ.ஜி காலனி, நேதாஜி காலனி, கல்கி நகர், ஆண்டாள் நகர் விரிவாக்கம். மற்றும் எம்ஜிஆர் நகர்.
ஐடி காரிடார்:
தரமணி பள்ளி சாலை, அரசு மருத்துவமனை, மாநகராட்சி அலுவலகம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
வேளச்சேரி:
ராம் நகர் 7, 8, 10, 11, 2 தெரு, விஜியா நகர் 3, 4 & 5 தெரு, ரோசி பிளாட், பை பாஸ் பிரதான சாலை மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
வியாசர்பாடி:
ராயபுரம் அண்ணா பூங்கா எம்.சி ரோடு, கல்லறை சாலை, வெங்கடாசலம் தெரு, மசூதி தெரு, ஆண்டியப்ப முதலி தெரு, ஆதம் தெரு, மீனாட்சி அம்மன் பேட்டை, வீராசாமி தெரு, வேலுயுதபாண்டியன் தெரு, பஜனை கோயில் தெரு, நல்லப்பா வாத்தியார் தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
கே.கே.நகர்:
விருகம்பாக்கம் இந்திரா நகர், ராஜீவ் காந்தி தெரு, பெரியார் நகர், கண்ணகி தெரு, எம்ஜிஆர் தெரு வளசரவாக்கம் கேசவர்த்தினி, சவுத்ரி நகர் பிரதான சாலை, பெத்தானியா நகர், ஆற்காடு சாலையின் ஒரு பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
பெரம்பூர்:
பேப்பர் மில்ஸ் சாலை ராஜபத்தர் தெரு, மாதவரம் உயர் சாலை, பள்ளி சாலை பகுதி, சுப்ரமணியன் சாலை பகுதி மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திருச்செந்தூர் முருகன் கோயில் செல்போன் பயன்படுத்த தடை.. உயர்நீதிமன்ற மதுரை அதிரடி