Power Shutdown in Chennai: அய்யய்யோ.. சென்னையில் இன்னைக்கு இந்த ஏரியாவுல கரண்ட் கட்டா..!

Published : Dec 02, 2022, 07:52 AM IST
Power Shutdown in Chennai: அய்யய்யோ.. சென்னையில் இன்னைக்கு இந்த ஏரியாவுல கரண்ட் கட்டா..!

சுருக்கம்

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். 

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கிண்டி உள்ளிட்ட  சுற்றுவட்டார பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 

கிண்டி பகுதி : 

ராஜ்பவன் டி.என்.எச்.பி.பகுதி, பவானி நகர், அம்பேத்கர் நகர், காமராஜர் தெரு கிண்டி & பரங்கிமலை மவுண்ட் பூந்தமல்லி ஒரு பகுதி, ராணுவ காலனி, சுந்தர் நகர் முகலிவாக்கம் டி.வி.நகர், மவுண்ட் பூந்தமல்லி ரோடு நந்தம்பாக்கம் கோலபாக்கம் கிராமம், ராமசந்திரா நகர், காமாட்சி நகர் டி.ஜி.நகர் தில்லை கங்கா தெரு, நங்கநல்லூர் புழுதிவாக்கம்,  மேடவாக்கம் மெயின் ரோடு, பிரதீப் மருத்துவமனை, ஆலந்தூர் எம்.கே.என்.ரோடு, தர்மராஜா கோயில் தெரு,  மடிப்பாக்கம் அன்னை தெரசா நகர், சங்கர்தாஸ் தெரு, நங்கநல்லூர், வோல்டாஸ் காலனி, லட்சுமி நகர், எஸ்.ஐ.பி.காலனி, ஏ.ஜி.எஸ்.காலனி மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!