நிலச்சரிவு அபாயம்... இந்த 3 மாவட்ட மக்கள் கொஞ்சம் உஷாரா இருங்க... வெளியானது எச்சரிக்கை...!

By Kanimozhi PannerselvamFirst Published Jul 8, 2021, 2:27 PM IST
Highlights

தமிழகத்தில் வேலூர், கோவை, நீலகிரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

தமிழகத்தில் வேலூர், கோவை, நீலகிரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை தொடர வாய்ப்புள்ளதாகவும், இன்று வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், நீலகிரி, கோவை, திருவண்ணாமலை, விழுப்புரம், தேனி மாவட்டங்களில் கனமழைக்கும், புதுவை மற்றும் பிற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல் நாளை நீலகிரி, கோவை, தேனி, குமரி, திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களிலும், நாளை மறுநாள் நீலகிரி, கோவை, குமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நீலகிரி, கோவை, தேனி ஆகிய 3 மாவட்டங்களின் மலை பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால், மண்சரிவு ஏற்படக்கூடும் என்றும், பொதுமக்கள் மலை ஏற்றத்தை தவிர்க்கவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

click me!