நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு ஆசிரியர்களுக்கு குட்நியூஸ்.. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு..!

Published : Jul 08, 2021, 12:17 PM IST
நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு ஆசிரியர்களுக்கு குட்நியூஸ்.. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு..!

சுருக்கம்

ஆசிரியர்களுக்கு ரூ.6 லட்சம் முதல் 14 லட்சம் வரை திருமண செலவு, புதிய கார், இருசக்கர வாகனம் வாங்க கடன் உதவி வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

ஆசிரியர்களுக்கு ரூ.6 லட்சம் முதல் 14 லட்சம் வரை திருமண செலவு, புதிய கார், இருசக்கர வாகனம் வாங்க கடன் உதவி வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பல்வேறு அதிரடி சலுகைகள் வழங்கப்படும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்நிலையில், தற்போது ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. 

இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் வெளியிட்டுள்ள கூற்றிக்கையில்;- புதிய பைக், கார் வாங்கவும் திருமணம் செய்யவும் அரசின் கடன் உதவி திட்டத்தை ஆசிரியர்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் ரூ.6 லட்சம் முதல் ரூ.14 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

இந்த கடனுதவி திட்டத்தை ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை பணியாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை ஊழியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

குட்நியூஸ்.. சென்னை மாநகரப் பேருந்து பாஸ் கட்டணம் அதிரடி குறைப்பு.. எப்படி பெறுவது?
ஐடி ஊழியர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை.. சிக்கிய கடிதம்.. பார்த்து அரண்டு மிரண்டு போன போலீஸ்