விபத்தில் சிக்கிய சென்னை மாநகராட்சி மேயர் பிரியா.. லாரி மோதி விபத்து.. மேயர் உடல்நிலை எப்படி இருக்கு?

By Raghupati R  |  First Published Feb 23, 2024, 10:51 PM IST

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா சென்ற கார் விபத்தில் சிக்கியது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


சென்னை மாநகராட்சி மேயர் பிரியா சென்ற கார் திடீரென விபத்தில் சிக்கியது பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. மேயரின் கார் மீது லாரி மோதிய இந்த மோசமான விபத்தில் எந்தக் காயமும் இன்றி மேயர் பிரியா உயிர் தப்பியிருக்கிறார்.

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா இன்று பணி முடிந்து வழக்கம் போல தனது அலுவலக காரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது,  மேயர் காருக்கு முன்னால் சென்ற கார் ஒன்று எந்தவித சிக்னலும் கொடுக்காமல் வளைவில் திரும்பியதாக கூறப்படுகிறது.

Tap to resize

Latest Videos

undefined

மேயர் பிரியாவின் கார் ஓட்டுநர் இதனையறியாமல் அந்த காரின் மீது மோதினார் என்று கூறப்படுகிறது.  இந்த் கார் மோதியதும் அடுத்த நொடியில் பின்னால் வேகமாக வந்த கார் மேயரின் காரின் பின்பக்கத்தில் பயங்கரமாக மோதியது.  இவ்விபத்தில் மேயரின் கார் ஓட்டுநருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

பிறகு இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதில்அதிர்ஷ்டவசமாக மேயர் பிரியாவுக்கு இந்த விபத்தில் எந்தக் காயமும் ஏற்படவில்லை. இதையடுத்து, போலீஸார் மேயரை வேறு காரில் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

வெறும் 37 ஆயிரம் ரூபாய்க்கு ஆப்பிள் ஐபோன் 15 வாங்கலாம்.. தள்ளுபடி விலையில் ஐபேடையும் வாங்குங்க..

click me!