பொதுமக்களுக்கு முக்கிய செய்தி.. சென்னை - திருப்பதி இடையே ரயில் சேவை ரத்து.. என்ன காரணம் தெரியுமா?

By vinoth kumar  |  First Published Feb 23, 2024, 11:12 AM IST

பராமரிப்பு பணி மற்றும் என்ஜினீயரிங் வேலை நடைபெற இருப்பதால் சில எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 


பராமரிப்பு பணி மற்றும் என்ஜினீயரிங் வேலை நடைபெற இருப்பதால் சில எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்:  

Tap to resize

Latest Videos

undefined

* திருப்பதியிலிருந்து காலை 6.25 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்.16204) வரும் 27, 28 மற்றும் மார்ச் 12, 13 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

*  மறுமார்க்கமாக, சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 4.35 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (16203) வரும் 27, 28 மற்றும் மார்ச் 12, 13 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

* சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு மைசூரு செல்லும் காவேரி எக்ஸ்பிரஸ் ரயில் (16021) வரும் 26, 27 மற்றும் மார்ச் 11, 12 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

* மறுமார்க்கமாக, மைசூரில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் செல்லும் காவேரி எக்ஸ்பிரஸ் ரயில் (16022) வரும் 27, 28 மற்றும் மார்ச் 12, 13 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

* பெங்களூருவில் இருந்து இரவு 10.40 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் (12658) வரும் 26, 27 மற்றும் மார்ச் 11, 12 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. 

* மறுமார்க்கமாக, சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 10.50 மணிக்கு புறப்பட்டு பெங்களூரு செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் வரும் 27, 28 மற்றும் மார்ச் 12, 13 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

click me!