மெட்ரோ ரயில் நிலையத்தில் பதற்றம்... மாடியிலிருந்து பள்ளி மாணவன் கீழே விழுந்து உயிரிழப்பு..!

By vinoth kumarFirst Published Jun 7, 2019, 6:23 PM IST
Highlights

சென்னை கோயம்பேடு பேருந்து நிலைய மெட்ரோ ரயில் நிலைய மாடியிலிருந்து பள்ளி மாணவர் கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். 

சென்னை கோயம்பேடு பேருந்து நிலைய மெட்ரோ ரயில் நிலைய மாடியிலிருந்து பள்ளி மாணவர் கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். 

சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காக மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டது. முதல் கட்டமாக 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் கோயம்பேடு- ஆலந்தூர் வரை உயர்மட்ட பாதையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. மெட்ரோ ரயில் சேவைக்கு பயணிகள், பொது மக்களிடையே பெரிதும் வரவேற்பு ஏற்பட்டது. இதனால் கோடை நாட்கள் என்பதால் அதிகப்படியான மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் மெட்ரோவில் பயணம் செய்து வருகின்றனர். 

இந்நிலையில் சென்னை கோயம்பேடு பேருந்து நிலைய மெட்ரோ ரயில் நிலைய மாடியிலிருந்து பள்ளி சீருடையில் இருந்த மாணவர் ஸ்ரீவந்த் அருண் எதிர்பாராத விதமாக திடீரென கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த ஸ்ரீவந்தை உடனே மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் ஸ்ரீவந்த் அருண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

click me!