அதிமுக செய்தி தொடர்பாளரும், திருநங்கையுமான அப்சரா ரெட்டிக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வேண்டும் என்று யூடியூபர் ஜோ மைக்கேலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக செய்தி தொடர்பாளரும், திருநங்கையுமான அப்சரா ரெட்டிக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வேண்டும் என்று யூடியூபர் ஜோ மைக்கேலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த அப்சரா ரெட்டி அதிமுக செய்தி தொடர்பாளராகவும், பிரபல மாடலாகவும் இருக்கிறார். இவர் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார். இந்த நிலையில் பிரபல மாடலிங் நிறுவனத்தை நடத்தி வரும் ஜோ மைக்கேல் பிரவீன் என்பவர் அப்சரா ரெட்டி குறித்து அவதூறாக பேசிய யூடியூபில் 10-க்கும் மேற்பட்ட வீடியோக்களை வெளியிட்டதாக கூறப்படுகிறது.
undefined
இதை தொடர்ந்து ஜோ மைக்கேல் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்த அப்சரா ரெட்டி, தன் மீது வதந்திகளை பரப்பி வரும் ஜோ மைக்கேல் ரூ.1.25 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும். தன்னை பற்றி வெளியிட்ட 10 வீடியோக்களையும் நீக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
9 ஆண்டுகள் சாப்பிட்டு இப்ப காரம்னு சொல்றாங்க.. அண்ணாமலை யார சொல்றாருன்னு கவனிச்சீங்களா?
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அப்சராவுக்கு ஜோ மைக்கேல் ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும் யூ டியூபில் கருத்துகளை வெளியிடும் உரிமை நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது என்று தெரிவித்தார்.
ஏற்கனவே அப்சரா தொடர்பான வீடியோக்களை யூ டியூபில் இருந்து கூகுள் நீக்கியதால் அந்நிறுவனம் நஷ்ட ஈடு வழங்குவதில் இருந்து தப்பியது.
நாட்டின் தூய்மையான நகரங்கள்; 100வது இடத்தில் கூட வராத தமிழகம் - டிடிவி தினகரன் வருத்தம்
கடந்த 2019-ம் ஆண்டு அப்சரா அளித்த புகாரின் பேரில் ஜோ மைக்கேல் பிரவீன் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தான் நடத்தி வரும் மாடல் இதழில் தன்னுடன் சேர்ந்து பணியாற்றுமாறு அப்சராவை ஜோ மைக்கேல் அணுகியதாகவும், ஆனால் அதனை அவர் நிராகரித்ததாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே ஜோ மைக்கேல் அப்சரா குறித்து அவதூறாக பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.