அதிர்ச்சி சம்பவம்... உயர்நீதிமன்ற நீதிபதி மகன், சகோதரி உட்பட 8 பேருக்கு கொரோனா..!

Published : Apr 08, 2021, 12:14 PM IST
அதிர்ச்சி சம்பவம்... உயர்நீதிமன்ற நீதிபதி மகன், சகோதரி உட்பட 8 பேருக்கு கொரோனா..!

சுருக்கம்

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதனின் மகன், சகோதரி உள்ளிட்ட 8 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 


சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதனின் மகன், சகோதரி உள்ளிட்ட 8 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கொரோனா ஊரடங்கின் போது வழக்குகள் அனைத்து காணொலி மூலம் விசாரிக்கப்பட்ட நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் நேரடியாகவும் விசாரிக்கப்பட்டது. பெரும்பாலான நீதிபதிகள் நேரடியாக விசாரிக்க ஒப்புதல் அளித்தனர். நீதிபதி எஸ்.வைத்தியநாதனும் வழக்குகளை நேரடியாக விசாரித்து வந்தார். 

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பசுமை வழிச் சாலையில் உள்ள நீதிபதிகள், அமைச்சர்கள் குடியிருப்பில் வசித்து வருகிறார்.அவருக்காக ஒதுக்கப்பட்ட நீதிமன்ற பணியாளரின் கணவர் உட்பட 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஆனால், தெரிவிக்காமல் அந்த பணியாளர் தொடர்ந்து பணிக்கு வந்துள்ளார். இதன்காரணமாக நீதிபதி வைத்தியநாதனின் அலுவலகத்தில் உள்ள வாகன ஓட்டுநர், நீதிமன்ற ஊழியர், 2 பொதுப்பணித்துறை ஊரியர்கள், ஒரு காவலர் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

மேலும், நீதிபதியின் மகனுக்கும், சகோதரிக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நீதிபதிகள், அமைச்சர்கள் குடியிருக்கும் பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!