Redfix: பெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஜாமீன்; ரெட்பிக்ஸ் சேனலை இழுத்து மூட உத்தரவு

By Velmurugan s  |  First Published Jul 31, 2024, 4:00 PM IST

யூடியூபர் சவுக்கு சங்கரின் நண்பரும், ஊடகவியலாளருமான பெலிக்ஸ் ஜெராட்டுக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் ரெட்பிக்ஸ் என்ற யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பெண் காவலர்கள் குறித்து மிகவும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். மேலும் இந்த கருத்தை தணிக்கை செய்யாமல் யூடியூப் சேனலின் தலைமை அதிகாரியான பெலிக்ஸ் ஜெரால்டும் அதனை பொதுவெளியில் வெளியிட்டார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து யூடியூபர் சவுக்கு சங்கர், அவரைத் தொடர்ந்து நேர்காணல் செய்த பெலிக்ஸ் ஜெரால்டும் கைது செய்யப்பட்டனர்.

Savukku Shankar: யூடியூபர் சவுக்கு சங்கருக்கு திடீர் நெஞ்சுவலி; ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதி

Tap to resize

Latest Videos

இந்த விவகாரத்தில் தமக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்ற பெலிக்ஸ் ஜெரால்டின் மனு ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இன்று மீண்டும் ஜாமீன் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டது. விசாரணையின் போது அரசு தரப்பு வழக்கறிஞர், பெலிக்ஸ் ஜெரால்டு ஏற்கனவே சர்ச்சகை்குரிய வகையில் கருத்து தெரிவிக்க மாட்டேன் என்று நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளார். ஆனால் அதனையும் மீது தற்போது மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளதாக வாதிடப்பட்டது.

அய்யய்யோ! ராமதாஸ்க்கு என்ன ஆச்சு? அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதியால் தொண்டர்கள் அதிர்ச்சி!

தாம் வெளியிட்ட வீடியோவின் விளைவு தற்போது தான் தெரிய வந்தது. இனி இது போல் நடந்து கொள்ள மாட்டேன் என உறுதி அளித்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இனி வரும் காலத்தில் பொதுவெளியில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவிக்க மாட்டேன் என பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யுமாறு கூறி மனு தாரருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும் சர்ச்சைக்குரிய வீடியோவை தணிக்கை செய்யாமல் வெளியிட்ட ரெட்பிக்ஸ் யூடியூப் சேரலையும் நிரந்தரமாக மூட நீதிபதி உத்தரவிட்டார்.

click me!