தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கோரிய வழக்கு... குடிமகன்களை குஷிப்படுத்திய நீதிமன்றம்..!

By vinoth kumarFirst Published May 4, 2020, 2:12 PM IST
Highlights

 பூரண மதுவிலக்கு என்பது அரசின் கொள்கை முடிவு. இதில், நீதிமன்றம் தலையிட முடியாது என்று வாதிட்டார். 

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த உத்தரவிடக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் நாடு முழுவதும் உள்ள மதுக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மது பிரியர்கள் மது அருந்த முடியாமல் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலை பயன்படுத்தி தமிழகத்தில் நிரந்தரமாக மதுக்கடைகளை மூட வேண்டும் என தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். 

இதனிடையே, பசுமை மண்டலங்களில் மதுக்கடைகளை சில விதிகளுக்கு உட்பட்டு திற்ககலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு அரசியல் தலைவர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தனசேகரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் வினித் கோத்தாரி, புஷ்பா சத்யநாராயணா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெற்ற இந்த விசாரணையில் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பூரண மதுவிலக்கு என்பது அரசின் கொள்கை முடிவு. இதில், நீதிமன்றம் தலையிட முடியாது என்று வாதிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

click me!