சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட ஏ.கே.மிட்டல் மத்திய பிரதேசத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட ஏ.கே.மிட்டல் மத்திய பிரதேசத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த வி.கே.தஹில் ரமானி கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 12-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே.தஹில் ரமானியை மேகாலயா மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்தும், மேகாலயா மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஏ.கே.மிட்டலை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்தது.
இந்நிலையில், கொலீஜியம் பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த செப்டம்பர் 6-ம் தேதி தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஆகியோருக்கு அனுப்பி வைத்தார். இதை குடியரசுத் தலைவரும் ஏற்றக்கொண்டார்.
இதனையடுத்து, மேகாலயா மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஏ.கே.மிட்டல் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட அதற்கான பரிசீலினை எல்லாம் உச்சநீதிமன்றத்தில் இருந்து வந்தது. இதனிடையே, வி.கே.தஹில் ரமானியின் ராஜினாமாவை அடுத்து சென்னை உயர்நீதிமன்றத்திற்கு பொறுப்பு தலைமை நீதிபதியாக வினீத் கோத்தாரி வழக்குகளை விசாரித்து வந்தார்.
இந்நிலையில், ஏற்கனவே இருந்த கொலீஜியம் முறையை சற்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கக்கூடிய ஏ.பி.சாஹியை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட ஏ.கே.மிட்டல் மத்திய பிரதேசத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். திரிபுரா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கரோல், பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார்.