வருடத்தின் முதல் நாளே சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை... மேலும் 4 நாட்கள் நீடிக்க வாய்ப்பு..!

By vinoth kumarFirst Published Jan 1, 2020, 10:33 AM IST
Highlights

சென்னையில் அதிகாலை முதலே பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. சென்னையில் போரூர், ராமாபுரம், தி.நகர், கீழ்பாக்கம், சைதாப்பேட்டை, கிண்டி, தரமணி அடையாறு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கியது. மேலும், புறநகர் பகுதிகளாக செங்கல்பட்டு, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் ஆகிய மழை பெய்தது. 

வளிமண்டல சூழற்சி மற்றும் காற்றின் வேகமாறுபாடு காரணமாக சென்னையில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் கூறுகையில்;- கிழக்கு-மேற்கு திசை காற்று ஒன்றோடு ஒன்று மோதுவதால் சென்னையில் 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும். அதேபோல், கடலோர மாவட்டங்களில் மழை நீடிக்க வாய்ப்புள்ளது. வடகிழக்கு பருவமழை நீடிப்பதால் இன்னும் சென்னையில் மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் பல்வேறு பகுதியில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து கொண்டு இருக்கிறது.

சென்னையில் அதிகாலை முதலே பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. சென்னையில் போரூர், ராமாபுரம், தி.நகர், கீழ்பாக்கம், சைதாப்பேட்டை, கிண்டி, தரமணி அடையாறு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கியது. மேலும், புறநகர் பகுதிகளாக செங்கல்பட்டு, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் ஆகிய மழை பெய்தது. 

இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். தமிழகத்தில் திருவண்ணாமலை, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது என்றார். இன்னும் 4 நாட்கள் வடகிழக்கு பருவமழை நீடிப்பதால் தமிழகத்திலும் புதுச்சேரியிலும் ஒரு சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

click me!