திருமணமாகி 10 நாட்களில் துயரம்... மகன் எங்களுக்கு இறுதி சடங்கு செய்யாமல் அவனுக்கு நாங்கள் செய்கிறோம்... கதறும் பெற்றோர்களின் பதறவைத்த காட்சிகள்..!

By vinoth kumarFirst Published Nov 20, 2019, 4:33 PM IST
Highlights

நானும் எனது மனைவியும் அநாதையாக நிற்கிறோம். எனது மகன் எங்களுக்கு இறுதி சடங்குசெய்வான் என்று எதிர்பார்த்தோம். ஆனால் விதியின் விளையாட்டால் இந்த இளம் வயதில் எனது மகனுக்கு நாங்கள் இறுதிச்சடங்கை செய்யும் துயரமான நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டோம் என தேனிலவுக்கு சென்று உயிரிழந்த அரவிந்த் தந்தை பாஸ்கரன் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

நானும் எனது மனைவியும் அநாதையாக நிற்கிறோம். எனது மகன் எங்களுக்கு இறுதி சடங்குசெய்வான் என்று எதிர்பார்த்தோம். ஆனால் விதியின் விளையாட்டால் இந்த இளம் வயதில் எனது மகனுக்கு நாங்கள் இறுதிச்சடங்கை செய்யும் துயரமான நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டோம் என தேனிலவுக்கு சென்று உயிரிழந்த அரவிந்த் தந்தை பாஸ்கரன் கண்ணீர் மல்க கூறியுள்ளார். 

சென்னை அமைந்தகரை திருவீதி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் அரவிந்த் (27). மருத்துவ துறையில் வேலை பார்த்தார். இவரது மனைவி பிரீத்தி, கனரா வங்கி ஊழியர். இவர்களுக்கு கடந்த வாரம் திருமணம் நடந்தது. இந்நிலையில் புதுமண ஜோடி, தேனிலவு கொண்டாட இமாச்சல பிரதேசம் மனாலிக்கு சென்றனர். அப்போது, பாராகிளைடர் விமானி ஹரு ராம் என்பவருடன் அரவிந்த் பறந்துள்ளார். இதை தரையில் இருந்து பிரீத்தி தன் கணவர் வானத்தில் பறப்பதை ஆர்வத்துடன் பார்த்து ரசித்து கொண்டிருந்தார். 

அப்போது, திடீரென பாராகிளைடரில் அமர்ந்திருந்த அரவிந்த்தின் பாதுகாப்பு பெல்ட் இடுப்பில் இருந்து கழன்று கீழே விழுந்த அரவிந்த சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, கணவரின் உடலை பார்த்து பிரீத்தி கதறி அழுதது அனைவரையும் கண்கலங்க வைத்தது. பின்னர், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக அரவிந்த், தந்தை பாஸ்கரன் அமைந்தகரையில் கண்ணீர் மல்க கூறியதாவது, ‘‘எனக்கு அரவிந்த் ஒரே மகன் என்பதால் அவனை மிகவும் செல்லமாக வளர்த்தேன். எனது மகன் மீது இருந்த பாசத்தால் ஆடம்பரமாக திருமணம் செய்து வைத்தோம் அவன் படித்து சம்பாதித்து எங்களை பார்த்துவந்தான். அவனது திருமண வாழ்க்கை 10 நாட்களுக்குள் முடிவுக்கு வந்துவிட்டது. 

இப்பொழுது நானும் எனது மனைவியும் அநாதையாக நிற்கிறோம். எனது மகன் எங்களுக்கு இறுதி சடங்குசெய்வான் என்று எதிர்பார்த்தோம். ஆனால் விதியின் விளையாட்டால் இந்த இளம் வயதில் எனது மகனுக்கு நாங்கள் இறுதிச்சடங்கை செய்யும் துயரமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் இந்த நிலை வேறு யாருக்கும் வரக்கூடாது தேனிலவுக்கு சந்தோஷமாக சென்ற எனது மகன் தற்போது சடலமாக வீட்டிற்கு வரப்போகிறான் நாங்கள் இதனை எப்படி எதிர்கொள்வது அவளது வாழ்க்கைக்கு என்ன விடை காண்பது என்று தெரியவில்லை மருமகளுக்கு ஆறுதல்கூற எங்களிடம் வார்த்தையில்லை என்றார். 

இதனையடுத்து, சென்னைக்கு வந்த அரவிந்த் அவர்களின் இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திமுக, அதிமுக, அமமுக, மார்க்சிஸ்ட், விடுதலைசிறுத்தை உள்ளிட்ட பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

click me!