சென்னையில் அதிர்ச்சி.. சாப்பிட்டு விட்டு கீழே போட்ட எச்சில் எலும்பை பொறுக்கி மீண்டும் சுட சுட சூப்..!

By vinoth kumar  |  First Published Mar 14, 2022, 8:53 AM IST

சென்னை பழைய ஓஎம்ஆர் காரப்பாக்கம் நடை மேம்பாலம் அருகே கடந்த 10 ஆண்டுகளாக ஒருவர் சாலையோரத்தில் மாலை 5 மணி முதல் இரவு வரை தள்ளுவண்டியில் ஆட்டு கால் சூப் கடை நடத்தி வருகிறார். இங்கு சூப் குடிக்கும் வாடிக்கையாளர்கள் சூப் குடித்துவிட்டு எலும்பு துண்டுகளை கீழே போட்டு விட்டு செல்கின்றனர்.

சென்னையை அடுத்த காரப்பாக்கத்தில் சூப் கடைக்காரர் ஒருவர் வாடிக்கையாளர் சாப்பிட்டு கீழே போட்ட எலும்புகளை மீண்டும் சூப் போட பயன்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஆட்டு கால் சூப் கடை

Tap to resize

Latest Videos

undefined

சென்னை பழைய ஓஎம்ஆர் காரப்பாக்கம் நடை மேம்பாலம் அருகே கடந்த 10 ஆண்டுகளாக ஒருவர் சாலையோரத்தில் மாலை 5 மணி முதல் இரவு வரை தள்ளுவண்டியில் ஆட்டு கால் சூப் கடை நடத்தி வருகிறார். இங்கு சூப் குடிக்கும் வாடிக்கையாளர்கள் சூப் குடித்துவிட்டு எலும்பு துண்டுகளை கீழே போட்டு விட்டு செல்கின்றனர். 

 எச்சில் எலும்பை பொறுக்கி மீண்டும் சுட சுட சூப்

பின்னர், சிறிது நேரம் கழித்து கீழே இருக்கும் எலும்பு தூண்டுகளை ஆள் இல்லாத நேரம் பார்த்து, சூப் கடைக்காரர் கீழே இருந்து எடுத்துவிட்டு தண்ணீர் கழுவி மீண்டும் சூப் பாத்திரத்தில் போட்டு விற்பனை செய்கிறார். இந்தக் காட்சிகள் அருகில் இருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

சென்னை மக்கள் அதிர்ச்சி

இது தொடர்பான வீடியோக்கள், தற்போது சென்னைவாசிகள் மத்தியில் அதிக வைரலாகி வருகிறது. அது மட்டுமில்லாமல், அந்த சூப் கடையின் வாடிக்கையாளர்கள் மத்தியிலும் இந்த சிசிடிவி வீடியோ, கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

click me!