தடுப்பு சுவரில் மோதல்! சினிமா பாணியில் கார் கதவில் இருந்து தூக்கி வீசப்பட்ட ஐடி பெண் ஊழியர் பலி..!

Published : Dec 19, 2022, 08:48 AM ISTUpdated : Dec 19, 2022, 09:10 AM IST
தடுப்பு சுவரில் மோதல்! சினிமா பாணியில் கார் கதவில் இருந்து தூக்கி வீசப்பட்ட ஐடி பெண் ஊழியர் பலி..!

சுருக்கம்

பொள்ளாச்சி பகுதியை சேர்ந்தவர் கிருத்திகா (23). இவர், சென்னையில் ஓஎம்ஆர் சாலையில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.  அதே பகுதியில் ஒரு விடுதியில் கிருத்திகா தங்கியுள்ளார். 

சென்னையில் அதிவேகத்தில் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஐடி பெண் ஊழியர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பொள்ளாச்சி பகுதியை சேர்ந்தவர் கிருத்திகா (23). இவர், சென்னையில் ஓஎம்ஆர் சாலையில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.  அதே பகுதியில் ஒரு விடுதியில் கிருத்திகா தங்கியுள்ளார். இவருடன் வேலை பார்க்கும் அபிஷா (26), கொளத்தூர் ஸ்ரீதர் (29), பங்கஜ் (18) ஆகிய 3 பேரும் நண்பர்கள். அவர்கள் சென்னை சுற்றிபார்க்க காரில் ஹோண்டா சிட்டி காரில் கிளம்பினர். காரை கொளத்தூரை சேர்ந்த ஸ்ரீதர் ஓட்டியுள்ளார். இவர்களின் கார் பள்ளிக்கரணை குப்பை கிடங்கு அருகே வந்து கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் இருந்த தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. 

இதையும் படிங்க;- மாடர்ன் உடை அணிந்த மனைவியை வெட்டிக் கொன்ற கணவன்

இந்த விபத்தில் எதிர்பாராத விதமாக காரின் பின் கதவு திறந்து கொண்டு கிருத்தியா தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இவருடன் பயணம் செய்த அபிஷா, ஸ்ரீதர். பங்கஜ் ஆகிய 3 பேரும் காரின் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தனர். 

படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 3 பேரைஅக்கம் பக்கத்தினர் மீட்டு  தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க;-  ஓஹோ இதுதான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கடி கூறும் சொல்லாததையும் செய்வதா? வச்சு செய்யும் டிடிவி.தினகரன்.!

PREV
click me!

Recommended Stories

போதையில் தாறுமாறாக ஓடிய கார்! விரட்டி சென்ற காவலர் உயிரி*ழப்பு! இளைஞரை HIT and RUN பிரிவில் தூக்கிய போலீஸ்!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!