சந்திரயான் - 2 பயணம் திடீர் நிறுத்தம்

Published : Jul 15, 2019, 11:27 AM IST
சந்திரயான் - 2 பயணம் திடீர் நிறுத்தம்

சுருக்கம்

இன்று அதிகாலை ஏவப்பட இருந்த சந்திரயான் -2 பயணம் திடீரென நிறுத்தி வைக்கப்பட்டது.

நிலவின் தென்துருவ பகுதிகளை ஆய்வு செய்ய இஸ்ரோ நிறுவனம் சந்திரயான் - 2 செயற்கைக்கோளை இன்று அதிகாலை 2.51 மணிக்கு ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவு தளத்தில் இருந்து ஏவுவதற்கு தயாராக இருந்தது. இதற்கான கவுன்டவுன் நேற்று காலை துவங்கியது.

இந்நிலையில் சற்று நேரத்தில் ஏவப்பட இருந்த சந்திரயான் - 2 விண்கலத்தில், திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து கவுன்டவுன் தற்காலிக நிறுத்தி வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிறிய பிரச்சனையால் சந்திரயான் - 2 தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாகவும், பெரிய பின்னடைவு என்று சொல்ல முடியாது என்றும் விஞ்ஞானி நம்பி நாராயணன் தெரிவித்துள்ளார்.

பிஎஸ்எல்வி மார்க் - 3ல் ஏற்பட்ட கோளாறு காரணமாக, தற்காலிமாக நிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ வெளியிட்டுள்ள டுவிட்டரில் தெரிவித்துள்ளது. மீண்டும் சந்திரயான் - 2 ஏவப்படும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

Tomato Price Today: தாறுமாறா குறைந்த தக்காளி விலை.! இனி தினமும் தக்காளி தொக்குதான் வீட்டுல.!
Chennai Power Cut: இன்று காலை 9 முதல் மதியம் 2 மணி வரை பவர் கட்! சென்னையில் எந்தெந்த இடங்களில் தெரியுமா?