தங்கச் செயின்! மோதிரம்! கண்ணாடி! அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்ட கேப்டன் விஜயகாந்த்..

By Raghupati R  |  First Published Dec 29, 2023, 6:23 PM IST

72 குண்டுகள் முழங்க கேப்டன் விஜயகாந்துக்கு அரசு மரியாதை அளிக்கப்பட்டது. தேமுதிக அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டார் கேப்டன் விஜயகாந்த்.


தேமுதிக நிறுவனத்தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் நேற்று  காலை 6.10 மணியளவில் உயிரிழந்தார். அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் வைக்கப்பட்டு பின்னர் தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இதையடுத்து பொதுமக்கள் மற்றும் ரசிகர்களின் அஞ்சலிக்காக விஜயகாந்தின் உடல் தீவுத்திடலில்  வைக்கப்பட்டது.  அங்கு திரையுலக பிரபலங்கள், அரசியல்வாதிகள், தொண்டர்கள், ரசிகர்கள் என பலரும் மதியம் 2.30 மணிவரை அஞ்சலி செலுத்தினர்.  இதையடுத்து விஜயகாந்த் உடல் இறுதி ஊர்வல வாகனத்தில் ஏற்றப்பட்டது.

விஜயகாந்துக்கு 72 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதி மரியாதை செலுத்தினார். pic.twitter.com/zhUsnn3w5e

— Asianetnews Tamil (@AsianetNewsTM)

Latest Videos

undefined

தீவுத்திடலில் இருந்து கோயம்பேடு தேமுதிக அலுவலகம் நோக்கி இறுதி ஊர்வலமாக வந்தடைந்தது. வழிநெடுகிலும் தொண்டர்கள், பொதுமக்கள் கண்ணீர் மல்க  அஞ்சலி செலுத்தினர். பிறகு தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்ட விஜயகாந்த் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், உதயநிதி ஸ்டாலின், டி.ஆர்.பாலு ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

 

72 குண்டுகள் முழங்க கேப்டனின் உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்பட்டது. பிறகு அவரது குடும்ப சடங்குகள் செய்யப்பட்டது. அவர் எப்போதும் அணிந்திருக்கும் தங்கச் செயின், மோதிரம், கண்ணாடி அணிந்தே அடக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இந்தியாவின் சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுதான்.. ஓலா ஸ்கூட்டரின் தாறுமாறான அம்சங்கள்..

click me!