தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை ரத்தா? தலைமைச் செயலாளர் சண்முகம் பரபரப்பு தகவல்..!

Published : Aug 13, 2020, 11:14 AM IST
தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை ரத்தா? தலைமைச் செயலாளர் சண்முகம் பரபரப்பு தகவல்..!

சுருக்கம்

தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல கட்டுப்பாடுகள் இருக்கும் வரை இ-பாஸ் நடைமுறை தொடரும் தலைமைச் செயலாளர் சண்முகம் தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல கட்டுப்பாடுகள் இருக்கும் வரை இ-பாஸ் நடைமுறை தொடரும் தலைமைச் செயலாளர் சண்முகம் தகவல் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் கே.சண்முகம் தலைமையில் ஆய்வுக்கூட்டம் மறைமலைநகரில் நேற்று நடந்தது. இதில், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டனர். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தலைமைச் செயலாளர் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் சிறப்பாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதிகம் பாதிப்புள்ள பகுதிகளில் குழுக்கள் அமைத்து ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளோம். 

பொதுமக்கள் மத்தியில் மாஸ்க் அணிவது மற்றும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது ஆகியவற்றில் குறைபாடு இருக்கும் காரணத்தினால், இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், வீடுகளுக்கே சென்று அரசால் வழங்கப்படும் மாஸ்க் கொடுக்க வேண்டும் என்றும் ஆலோசனைக் கூட்டத்தின் வாயிலாகத் தெரிவிக்கப்பட்டது என்று தெரிவித்தார்.

மேலும், கொரோனா தொற்று அதிகமுள்ள பகுதிகளில் தடுப்புப் பணிகளைக் கண்காணிக்கக் குழுக்கள் அமைக்கப்படும். கொரோனா தொற்று ஏற்பட்ட நபர்களிடம் தொடர்பில் இருந்த நபர்களைத் தீவிரமாகக் கண்டறிந்து அவர்களைத் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். நோய்த் தொற்று அதிகமாக உள்ள பகுதிகளில் மாநில அளவில் சிறப்புக் குழுக்களை அனுப்புவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார். அப்போது, இ-பாஸ் பெறுவதில் இருக்கும் நடைமுறை சிக்கல்களைக் களைய நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று தெரிவித்த அவர், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல கட்டுப்பாடுகள் இருக்கும் வரை இ-பாஸ் நடைமுறை தொடரும்.  அதில் தளர்வுகள் இருக்காது என்றார்.

PREV
click me!

Recommended Stories

Chennai Power Cut: மே 24ம் தேதி.. ஞாயிற்றுக்கிழமை அதுவுமா சென்னையில் எந்தெந்த பகுதிகளில் மின்தடை!
TVK Supporter Arrested: சென்னையில் அதிர்ச்சி! வீட்டில் கஞ்சா செடி வளர்த்த தவெக ஆதரவாளரை தட்டி தூக்கிய போலீஸ்! சிக்கியது எப்படி?