கேன் தண்ணீர் விலை ரூ.50 விற்பனை… - அதிர்ச்சி தகவல்

By Asianet TamilFirst Published Jun 22, 2019, 6:06 PM IST
Highlights

பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீர் கேன் விலை தற்போதுள்ள ரூ.30ல் இருந்து, ரூ.50க்கு மேல் விற்பனையாகும் என் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனால், பொதுமக்கள் வேதனையடைந்துள்ளனர்.

பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீர் கேன் விலை தற்போதுள்ள ரூ.30ல் இருந்து, ரூ.50க்கு மேல் விற்பனையாகும் என் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனால், பொதுமக்கள் வேதனையடைந்துள்ளனர்.

சென்னை நகரில் ஒரு நாளுக்கு 1,300 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. குடிநீர் வாரியத்தால் 850 மில்லியன் லிட்டர் மட்டுமே முடியும். தற்போது ஏற்பட்டுள்ள தண்ணீர் பிரச்சனையால, 500 முதல் 525 மில்லியன் லிட்டர் தண்ணீரை தினமும் சென்னை குடிநீர் வாரியம் வழங்குகிறது.

நெம்மேலி, மீஞ்சூரில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், வீராணம் ஏரி தண்ணீர், நெய்வேலி தண்ணீர், திருவள்ளூர் மாவட்ட விவசாய கிணறுகளில் இருந்து கிடைக்கும் தண்ணீர் ஆகியவற்றின் மூலம் தற்போது தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.

பருவ மழை பெய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், ஜோலார்பேட்டையில் இருந்து ரூ.65 கோடி செலவில் சென்னைக்கு ரயிலில் தண்ணீர் கொண்டு வர முடிவு செய்துள்ளனர்.  இதற்கிடையில், தண்ணீரை பெறுவதற்கும், புதிய பிரச்சனை உருவாகிவிட்டது.

சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளதால், தண்ணீர் கிடைப்பது அரிதாகிவிட்டது. தனியார் டேங்கர் லாரி உரிமையாளர்கள், தண்ணீரை பெறுவதற்காக மேலும் பல கிலோ மீட்டர் தூரம் செல்கின்றனர்.

இதையொட்டி, டேங்கர் லாரி தண்ணீர் விலை அடிக்கடி உயர்த்தப்படுகிறது. 12 ஆயிரம் லிட்டர் டேங்கர் லாரி தண்ணீர் முன்பு ரூ.1,200க்கு விற்கப்பட்டது. தற்போது ரூ. 3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை உயர்ந்து விட்டது. தண்ணீர் தட்டுப்பாடு அதிகரிக்கும் பட்சத்தில் தனியார் டேங்கர் லாரிகளின் தண்ணீர் விலை, மேலும் அதிகரிக்கும் என தெரிகிறது.

லாரி தண்ணீர் கிடைக்காத நிலையில் சிலர் கேன் தண்ணீர் மூலம் நிலைமையை சமாளித்து வருகிறார்கள். சென்னையில் குடிநீருக்காக பெரும்பாலானோர் கேன் தண்ணீரையே நம்பி உள்ளனர். தண்ணீர் தட்டுப்பாட்டால், கேன் தண்ணீருக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து கேன் தண்ணீர் விலையை உயர்த்த தனியார் குடிநீர் உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. தற்போது 20 லிட்டர் கேன் தண்ணீர், ஏரியாவுக்கு ஏற்ப ரூ.30 முதல் ரூ.50 வரை விற்பனையாககிறது.

இந்த கேன் தண்ணீர் விலையை ரூ.8 முதல் ரூ.10 வரை உயர்த்த உற்பத்தியாளர்கள் முடிவு செய்து இருப்பதாக தெரிய வந்துள்ளது. தண்ணீர் தட்டுப்பாடு மற்றும் செலவினங்கள் அதிகரிப்பு காரணமாக இந்த விலை உயர்வை தவிர்க்க முடியாது என்று குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

click me!