ஒரு பாக்கெட் பிரியாணி வாங்கினால் 20 லிட்டர் வாட்டர் இலவசம்!! அசத்தும் பிரியாணி கடை... அலைமோதும் மக்கள்!!

Published : Jun 24, 2019, 12:08 PM IST
ஒரு பாக்கெட் பிரியாணி வாங்கினால் 20 லிட்டர் வாட்டர் இலவசம்!! அசத்தும் பிரியாணி கடை... அலைமோதும் மக்கள்!!

சுருக்கம்

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக தண்ணீர் பிரச்சினை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. அதிலும் சென்னையில் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. சென்னையில் வாழும் வெளியூர்வாசிகள் சொந்த ஊருக்கு விட்டு படையெடுக்கும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகள் சமூகத் தொண்டு நிறுவனங்கள் பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கி வந்தாலும் இன்னும்  சமாளிக்க முடியாமல்  வருகின்றனர்.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக தண்ணீர் பிரச்சினை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது அதிலும் சென்னையில் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. சென்னையில் வாழும் வெளியூர்வாசிகள் சொந்த ஊருக்கு விட்டு படையெடுக்கும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகள் சமூகத் தொண்டு நிறுவனங்கள் பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கி வந்தாலும் இன்னும்  சமாளிக்க முடியாமல்  வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில்  பிரியாணி கடை ஒன்றில் அறிவித்துள்ள சலுகையால் வியாபாரம் களைகட்டியுள்ளது, பொதுமக்கள் குவிந்துள்ளனர்.  

சென்னையில் இளைஞர்கள் சிலர் படித்துவிட்டு வேலை கிடைக்காததால் "தொப்பி வாப்பா பிரியாணி கடை" நடத்தி வருகிறார். வேளச்சேரி மற்றும் மேடவாக்கம் பகுதியில் இயங்கி வரும் இந்த கடையில், கடந்த சில நாட்களாக கூட்டம் களை கட்டியுள்ளது. கடந்த சில நாட்களாக சென்னையில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வரும் நிலையில், தொப்பி வாப்பா பிரியாணி கடையில் ஒரு பக்கெட் பிரியாணி வாங்கினால் இலவசமாக 20 லிட்டர் வாட்டர் கேன் கொடுத்து அசத்தி வருகின்றனர்.

இதனால் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகரித்து உள்ளதாக கடையின் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். இந்த கடையில் தண்ணீர் இப்போதும் விற்பனைக்கு அல்ல என்று கேட்போரை ஆச்சரியத்தில் அசத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

பொங்கல் பண்டிகை அதுவுமா! மெட்ரோ ரயில் சேவையில் அதிரடி மாற்றம்! இதோ முழு விவரம்!
சென்னையை சுற்றி பார்க்க சூப்பர் வாய்ப்பு.. 50 ரூபாய் இருந்தால் போதும்.. அமைச்சர் சொன்ன குட்நியூஸ்!