கேதார்நாத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த 3 பேர் உடல்கள் சென்னைக்கு கொண்டுவரப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
கேதார்நாத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த 3 பேர் உடல்கள் சென்னைக்கு கொண்டுவரப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் புனித யாத்திரைக்கு சென்ற போது ஹெலிகாப்டர் பயணம் செய்தவர்கள் விபத்தில் சிக்கினர். அந்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த 1 விமானி, 6 யாத்ரீகர்கள் என 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். உயிரிழந்த 7 பேரில் 3 பேர் தமிழகம் மாநிலம் சென்னை அண்ணா நகரை சேர்ந்த பிரேம்குமார்(63), கலா(50), சுஜாதா(56) பிரேம்குமார் என்பது தெரிய வந்தது.
இதையும் படிங்க: திருச்சியிலிருந்து தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கம்! - 3 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைப்பு!
இதை அடுத்து உயிரிழந்தவர்களின் உடல்களை சென்னைக்கு விரைந்து கொண்டு வர தமிழக அரசு உத்தரகாண்ட் மாநில அரசுடன் இணைந்து செயல்பட்டது. அதன்படி உத்தரகாண்ட் மாநிலத்தில் இருந்து விமானத்தில் 3 பேரின் உடல்கள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் 3 பேரின் உடல்களுக்கு தமிழக வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.
undefined
இதையும் படிங்க: சென்னையில் ரூ.2.36 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்... எத்தியோப்பியாவை சேர்ந்தவர் கைது!!
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான், உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய இடங்களுக்கு புனித யாத்திரை சென்ற போது ஹெலிகாப்டர் விபத்தில் 3 பேர் பலியானார்கள். முதலமைச்சர் இரங்கல் தெரிவித்து உறவினர்கள் சென்று உடல்களை அடையாளம் காட்டி கொண்டு வர ஏற்பாடு செய்து தந்தார். உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டு முதலமைச்சரின் இரங்கலை தெரிவிக்கப்பட்டது என்று தெரிவித்தார். அதை தொடர்ந்து உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் வீடுகளுக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது.